This Article is From Oct 09, 2019

“Congress கட்சியை கலைத்துவிட்டு…”- கே.எஸ்.அழகிரியை வறுத்தெடுத்த Karate தியாகராஜன்!

கட்சியின் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸை கலைத்துவிட்டு, திமுகவில் போய் சேர்ந்துவிடலாம் - Karate Thiagarajan

Advertisement
தமிழ்நாடு Written by

தன் மானத்தை விட்டுக் கொடுத்து திமுக காலில் போய் விழுவது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது - Karate Thiagarajan

ஒழுங்கு நடவடிக்கையால் காங்கிரஸ் (Congress) கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் (Karate Thiagarajan), கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி (KS Alagiri) குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தியாகராஜன், “ஸ்டாலின் ஒரு மிகப் பெரிய கட்சியின் தலைவர்தான். திமுக, தமிழகத்தில் ஒரு நல்ல நிலையில்தான் இருக்கிறது. ஆகவே, திமுக-வை மதிப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால், தன் மானத்தை விட்டுக் கொடுத்து திமுக காலில் போய் விழுவது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

கட்சியின் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸை கலைத்துவிட்டு, திமுகவில் போய் சேர்ந்துவிடலாம். அங்கு எதாவது மாவட்டத்தின் செயலாளராக பதவி வாங்கிக் கொள்ளலாம். அவர் செய்யும் செயல் அப்படித்தான் இருக்கிறது. 

திமுக-வை அண்டித்தான் காங்கிரஸ் பிழைத்திருக்கும் நிலைக்கு அவர் கட்சியைத் தள்ளியிருக்கிறார். இன்னும் ஒரு சில வாரங்களில் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் மாற்றம் வரும்” என்று அதிரடியாக பேசியுள்ளார். 

Advertisement

சூப்பர்ஸ்டார் ரஜினியின் மிகவும் நெருங்கிய நண்பரான தியாகராஜன், “தமிழகத்தின் ஒன்றரை கோடி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர் ரஜினிகாந்த். அவரை காங்கிரஸில் இருந்த காலத்திலேயே நான் பாராட்டிப் பேசியுள்ளேன். அப்போதே, என்னை யாரும் கேள்வி கேட்டது கிடையாது. ஆனால், இப்போது அழகிரி அது குறித்தெல்லாம் சர்ச்சை ஏற்படுத்துகிறார்” என்றார். மேலும் அவர், “நாங்குநேரி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறத்தான் வாய்ப்புகள் அதிகம். அது காங்கிரஸ் கோட்டைதான். ஆனால், அங்கேயும் காங்கிரஸைத் தோற்கடிக்க திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது” என்ற பகிரங்க குற்றச்சாட்டையும் முன் வைத்துள்ளார். 


 

Advertisement
Advertisement