This Article is From Oct 16, 2019

“வெங்காய வெடி கூட வாங்க தகுதியில்லாத Seeman-ஐ அடித்து விரட்டுவேன்”- எச்சரிக்கும் கராத்தே தியாகராஜன்!

Seeman News-

Advertisement
தமிழ்நாடு Written by

Seeman News-

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி (Rajiv Gandhi) குறித்து நாம் தமிழர் கட்சியின் (Naam Tamilar Katchi) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman) பேசியது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள கராத்தே தியாகராஜன் (Karate Thiyagarajan), அவரைக் கடுமையாக எச்சரித்துள்ளார். 

முன்னதாக சீமான் விக்கிரவாண்டி பிரசாரக் கூட்டத்தில் பேசியபோது, “காந்தியை, கோட்சே சுட்டார். அவர் சுட்டது சரிதான் என்று தொடர்ந்து பேசி வருகிறார்கள். பொது வெளியில் தொடர்ச்சியாக அது குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

அதே மாதிரிதான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். சரிதான் போடா. ஒரு காலம் வரும். வரலாறு திரும்ப எழுதப்படும். என் இனத்தை இந்திய ராணுவம், அமைதிப் படை என்கிற அணியாயப் படையை அனுப்பி என் இன மக்கள் கொன்று குவித்த, என் இனத்தின் எதிரியான ராஜீவ் காந்தியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு எழுதப்படும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

சீமானுக்கு எதிராக விக்கிரவாண்டியில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி இந்தப் பிரச்னை தொடர்ந்து பூதாகரமாகி வரும் நிலையில், கராத்தே தியாகராஜன், “நம் கட்சியின் தலைவர் ராஜீவ் காந்தியைப் பற்றி தரக்குறைவாக சீமான் பேசியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், கே.எஸ்.அழகிரி ஒரு அறிக்கை விடுகிறார். திமுக, இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. சீமான் இப்படி தொடர்ந்து பேசி வந்தால், அவர் தமிழகத்தில் நடமாடவே முடியாது என்பதை எச்சரிக்க விரும்புகிறேன்.

Advertisement

சீமான் வந்தாலும் சரி, நாம் தமிழர் கட்சியிலிருந்து 1000 பேர் வந்தாலும் சரி அனைவரையும் அடித்து விரட்டுவோம். காந்தியை மட்டுக் கொண்டதல்ல காங்கிரஸ். சுபாஷ் சந்திர போஸ் போன்ற தொண்டர்களும் எங்கள் கட்சியில் இருக்கிறார்கள். உடனடியாக சீமான், தான் சொன்ன கருத்துக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று எச்சரித்துள்ளார். 
 

Advertisement