This Article is From Jul 04, 2019

தமிழக மக்கள் குறித்த கருத்துக்கு கிரண்பேடி வருத்தம் தெரிவித்தார் - ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அந்த ட்விட்டை கவனித்தது. இதற்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

Advertisement
இந்தியா Translated By

சென்னை நகரம் வறட்சியில் சிக்கித் தவிப்பதற்கு  மோசமான நிர்வாகமும், ஊழல் அரசியலும் மக்களின் சுயநலமும் தான் காரணம் என்று தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். கிரண்பேடியின் இந்த க் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பேசியதோடு மட்டுமின்றி திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் சேர்ந்து வெளி நடப்பு செய்தார்.

இன்று மக்களவையில் பேசிய திமுக எம்பி டி.ஆர்.பாலு, புதுச்சேரி கவர்னர் ஒரு ட்விட்டில் தமிழக மக்களையும் ஒட்டுமொத்த சமூகத்தையும் கேலி செய்துள்ளார். அரசாங்கம் அவரது கருத்தை ஒப்புக்கொண்டால், அது அவரை ஆதரிக்கிறது என்று அர்த்தம். நான் பதிலளிக்க அவையின்  துணைத் தலைவரிடம் கேட்டுக்கொள்கிறேன் என கூறினார். 

இதற்கு பதில் அளித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அந்த ட்விட்டை கவனித்தது. இதற்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

Advertisement

'எழுதப்பட்டவை எனது தனிப்பட்டதாக இருந்தன, இருப்பினும் இது தவிர்க்கக்கூடியது என்று நான் ஒப்புக்கொள்கிறேன். தமிழக மக்களைப் பற்றி எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என கிரண் பேடி தெரிவித்து உள்ளார் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

Advertisement