Karnataka Crisis: ராஜினாமா செய்தவர்களில் 10 பேரின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
Bengaluru: 18 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள நிலையில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவற்றின் கூட்டணி நிலைக்குமா…? நீடிக்குமா…? என்ற கேள்விகளுடன் இன்று கர்நாடக சட்டமன்றம் இன்று கூடுகிறது.
அரசு நிலைத்தன்மை கேள்விக்குரியதாக இருந்தாலும் நம்பிக்கையுடன் இருப்பதாக ட்வீட் செய்துள்ளார்.
அரசின் நிலைத்தன்மைக்கு முயற்சிகள் மேற்கொண்டிருந்தாலும் மாநிலத்தில் காங்கிரஸ் -ஜே.டி.எஸ் கூட்டணி வலுவாக உள்ளது. சட்டமன்றக் கூட்டம் சுமூகமாகவும் பயனுள்ள வகையிலும் நடக்கும் என்ற நம்பிக்கையுடன் தயாராக உள்ளோம் என்று குமாராசாமி நேற்று இரவு ட்வீட் செய்திருந்தார்.
காங்கிரஸ் தனது எம்.எல்.ஏக்களுடன் இந்த அமர்வில் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது. ஜேடிஎஸ் தனது எம்.எல்.ஏக்களை தக்க வைக்க தனி ரிசார்ட்டில் தனது எம்.எல்.ஏக்களை வைத்துள்ளது.
18 சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவை சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் குமார் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் ஆளும் கூட்டணி சார்பாக நேரத்தை கடத்துவதாக குற்றம் சாட்டப்பட்டார்.
ராஜினாமா செய்தவர்களில் 10 பேரின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
நேற்றிரவு சபாநாயகர் தனது முடிவை நீதிமன்றத்திற்கு தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால் அவர் “நான் மின்னல் வேகத்தில் செயல்படுவேன் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது” என்று கூறினார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளை அணுகி இந்த ராஜினாமாக்கள் கட்டாயப்படுத்தப்பட்டதா அல்லது தானாக முன்வந்து கொடுகப்பட்டதா என்பதை ஆராய வேண்டும் அதற்கு நேரம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ராஜினாமாக்களை சரிபார்க்க வேண்டியது தனது அரசியலமைப்பு கடமை என்று கூறினார்.