This Article is From May 28, 2020

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் இருந்து ரயில்கள், விமானம் வரத்தடை! கர்நாடகா அதிரடி

தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் இருந்து எந்தவொரு வாகனமோ, ரயில்களோ, விமானங்களோ கர்நாடகத்திற்குள் வர அனுமதிக்கப்படாது.

Advertisement
இந்தியா

நாட்டிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களாக குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உள்ளன.

Highlights

  • மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு ஆகியவை நாட்டில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன
  • 5 அண்டை மாநிலங்களில் இருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது
  • கொரோனா பரவல் அதிகரிப்பால் கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை
New Delhi:

தமிழகம் உள்பட 5 அண்டை மாநிலங்களில் இருந்து வாகனங்கள், ரயில்கள் மற்றும் விமானங்கள் வருவதற்கு தடை விதிக்கப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. 

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் இருந்து எந்தவொரு வாகனமோ, ரயில்களோ, விமானங்களோ கர்நாடகத்திற்குள் வர அனுமதிக்கப்படாது. 

நாட்டிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களாக குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உள்ளன. 

மே 18-ம்தேதியன்று இரு மாநிலங்களின் ஒப்புதல் இருந்தால் பயணிகள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லலாம் என அறிவித்தது. 

Advertisement

ஆனால், கர்நாடக அரசு அப்போதே மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து பயணிகள் வருவதற்கு தடை விதித்தது. 

அதன்பின்னர் மத்திய அரசு உள்நாட்டு விமானப் போக்குவரத்தை தொடங்கியபோது அதற்கு கர்நாடகா கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இந்த நிலையில் கர்நாடகா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜூன் 1-ம்தேதி முதல் பயணிகள் ரயில் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement
Advertisement