This Article is From Jun 11, 2019

'அதிகாரிகளுக்கு ரூ.400 கோடி வரை லஞ்சம்' - மோசடி புகாருக்கு ஆளான தொழிலதிபர் குற்றச்சாட்டு

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நகைக்கடை நடத்தி வந்த தொழில் அதிபர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார்.

'அதிகாரிகளுக்கு ரூ.400 கோடி வரை லஞ்சம்' - மோசடி புகாருக்கு ஆளான தொழிலதிபர் குற்றச்சாட்டு

மோசடி விவகாரத்தில் ஐக்கிய ஜனதா தள கட்சியை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

Bengaluru:

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகி தற்கொலை செய்யப்போவதாக கூறியுள்ள தொழில் அதிபர் ஒருவர், தான் ரூ. 400 கோடி அளவுக்கு அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்ததாக கூறியுள்ளார். அவர்களில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ரோஷன் பேக்கும் ஒருவர் என்று அவர் கூறியிருப்பது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

பெங்களூருவில் ஐ.எம்.ஏ. ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் மன்சூர் கான் என்பவர் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். இந்த கடையில் தங்கம் வாங்குவதற்காக ஏராளமானோர் பணம் அளித்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் பணத்திற்கு தங்கம் அளிக்காமல் ஏமாற்றி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரிடம் பணம் செலுத்தியவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் மன்சூர் வெளியிட்டுள்ள ஆடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

அந்த ஆடியோவில் கர்நாடகாவில் காங்கிரஸ் மூத்த தலைவரும், காங்கிரஸ எம்எல்ஏவுமான ரோஷன் பேக், அதிகாரிகளுக்கு தன்னிடம் இருந்து ரூ. 400 கோடி வரைக்கும் லஞ்சம் வாங்கித் தந்ததாக கூறியுள்ளார். 

இந்த விவகாரம் குறித்து மாநில கிரைம் பிராஞ்ச் போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்றும், அதுபற்றி மாநில உள்துறை அமைச்சரிடம் பேசியுள்ளதாகவும் முதல்வர் குமாரசாமி தெரிவித்திருக்கிறார். 

இந்த விவகாரத்தில் குமாரசாமியை விமர்சித்துள்ள எதிர்க்கட்சியான பாஜக, மன்சூர் கானுடன் குமாரசாமி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, 'மோசடி செய்திருக்கும் மன்சூர் கானை உங்களுக்கு நீண்டகாலமாக தெரியும். நீங்கள் அவரை பிடிக்க உதவி செய்ய வேண்டும். ஏமாற்றுபவர்களை பிடிப்பதுதான் உங்கள் வேலை. பாதிக்கப்பட்டவர்களுக்காக கண்ணீர் வடிப்பது அல்ல.' என்று குறிப்பிட்டுள்ளது. 

.