Read in English
This Article is From Aug 17, 2019

தொழிலில் நஷ்டம்: மனைவி, மகன், பெற்றோரை சுட்டுக்கொன்ற தொழில் அதிபர், தானும் தற்கொலை!

இதுகுறித்து போலீசார் கூறும்போது, குடும்பத்துடன் மைசூரில் வசித்து வந்தவர், பந்திப்பூர் அருகே உள்ள பண்ணை வீட்டை ஒரு நாள் இரவு தங்குவதற்கு வாடைக்கு எடுத்துள்ளார். அங்கு வைத்தே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisement
Karnataka Edited by

இந்த சம்பவம் தொடர்பாக பந்திப்பூர் காவல்நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Bengaluru:

கர்நாடகாவில் தொழில் நஷ்டம் காரணமாக விரக்தியடைந்த தொழிலதிபர் ஒருவர் தன் கர்ப்பிணி மனைவி, மகன், மற்றும் பெற்றோரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஓம்பிரகாஷ் அனிமேஷன் மற்றும் டேட்டா பேஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் தொழிலுக்காக பலரிடம் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பக் கேட்டு தொந்தரவு செய்ததால் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் பந்திப்பூருக்கு சுற்றுலா சென்ற ஓம்பிரகாஷ் அங்கு உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார். அங்கு இரவு நேரத்தில் ஒட்டுநர் மற்றும் உதவியாளரை காலையில் வருமாறு அனுப்பி வைத்துவிட்டு குடும்பத்தினருடன் விடுதிக்கு அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார்.

Advertisement

இதையடுத்து ஓம்பிரகாஷ், தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து தனது தாய், தந்தை, மனைவி, மகனை துப்பாக்கியால் சுட்டுக்  கொன்றுள்ளார். இதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் அதே துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதில், தந்தை நாகராஜ் பட்டாச்சார்யா(65), தாயார் ஹேமாராஜு(60), மனைவி நிகிதா(28), மகன் ஆரியா கிருஷ்ணா(4) ஆகியோர் உயிரிழந்தோர் ஆவார்கள். 

Advertisement

இந்த சம்பவம் மறுநாள் காலையில் ஒட்டுநர் மற்றும் உதவியாளர் விடுதிக்கு திரும்பிய போதே தெரியவந்துள்ளது. அறையில் யாரும் இல்லாததை அடுத்து வெளியே சென்று தேடியுள்ளனர். அப்போது, அவர்கள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். 

இதில், ஓம்பிரகாசின் மனைவி நிகிதா 8 மாதம் கர்ப்பமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓம் பிரகாஷ் உரிமம் வாங்கிய துப்பாக்கி ஒன்றை தனது கையிலே வைத்துள்ளார். அதனை வைத்தே அனைவரையும் சுட்டுக்கொன்றுள்ளார். 

Advertisement

இவர்களது 5 பேரின் உடலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் ஓம்பிரகாஷின் சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
 

Advertisement