This Article is From Nov 06, 2018

கர்நாடகா இடைத் தேர்தல் 2018: லைவ் அப்டேட்ஸ்!

Karnataka Election Results 2018: இடைத் தேர்தல்களின் முடிவுகள் அடுத்து வரவுள்ள லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகா இடைத் தேர்தல் 2018: லைவ் அப்டேட்ஸ்!

கடந்த மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தம் இருக்கும் 224 தொகுதிகளில் 104-ல் பாஜக வென்றிருந்தது

New Delhi:

கர்நாடகாவில் இன்று 3 லோக்சபா தொகுதிக்கும், 2 சட்டமன்ற தொகுதிக்கும் இடைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பமாகியுள்ள நிலையில், இடைத் தேர்தலின் முடிவுகள் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மககளவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று நம்பப்படுகிறது. 

லோக்சபா தொகுதிகளான சிவமுகா, பல்லாரி, மாண்டியா ஆகியவற்றுக்கும், சட்டமன்ற தொகுதிகளான ஜமகாண்டி மற்றும் ராமநகரா ஆகியவற்றுக்கும் இன்று இடைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மூன்று லோக்சபா தொகுதிகளில் இரண்டு பாஜக வசமும், 1 மதச்சார்பற்ற ஜனதா தளம் வசமும் இருந்தது. சில மாதங்களுக்கு முன்னர் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வந்தது. ஆனால், காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. இதனால் பாஜக-வுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில், இன்றைய சட்டமன்ற தேர்தல், இரு தரப்புக்கும் மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

2014 ஆம் ஆண்டு, மொத்தம் இருக்கும் 28 லோக்சபா தொகுதிகளில் பாஜக 17-ல் வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் மஜத 2 தொகுதிகளிலும் வெற்றியடைந்திருந்தது. அதேபோல கடந்த மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தம் இருக்கும் 224 தொகுதிகளில் 104-ல் பாஜக வென்றிருந்தது.

லைவ் அப்டேட்ஸ்:

மதியம் 2:23 – 2019 பொதுத் தேர்தலில் மகா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி கூறியுள்ளார். 

மதியம் 2:21 – கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்கின்றனர். இதனை நாடு முழுவதும் மக்கள் அளிக்கும் முடிவுகள் தெளிவாக காட்டுகிற்ன. எங்கு கூட்டணி அமைத்தாலும் பாஜக தோற்று விடுகிறது. என்று குமாரசாமி கூறியுள்ளார். 

மதியம் 2:18 – பண பலம் மூலம் வெற்றி பெறுவது என்று வந்து விட்டால், பாஜகவுடன் எந்த கட்சியும் போட்டி போட முடியாது. மற்ற அனைத்து கட்சிகளையும் விட பாஜகதான் பணக்கார கட்சி : எச்.டி. குமாரசாமி

மதியம் 2:17 – மோடி அலை இனிமேலும் எடுபடாது. 2014-ல் இருந்த நிலைமை வேறு. இப்போதுள்ள சூழல் வேறு. அவர் இதுநாள் வரையில் வாக்குறுதிகளை மட்டுமே அளித்துக் கொண்டிருந்தார். அவரால் என்ன செய்ய முடியும் என்பதை மக்கள் பார்த்து விட்டனர். 2019 தேர்தலில் அவரால் வெற்றி பெற முடியாது : எச்.டி. குமாரசாமி

மதியம் 2:14 – காங்கிரஸ் – ஐக்கிய ஜனதா தள கூட்டணி மாநிலம் முழுவதும் வலுவாக உள்ளது. இதேபோன்று 2019 மக்களவை தேர்தலிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். - குமாரசாமி

மதியம் 2:13 – இன்னும் சிறப்பாக தேர்தல் பணியாற்றிருக்க வேண்டும். முன்னரே சிவமொகா தொகுதியை காங்கிரஸ் விட்டுத் தந்திருந்தால் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும். அவர்கள் கடைசி நேரத்தில்தான் எங்களுக்கு தந்தார்கள் என என்.டி.டீ.வி.-க்கு குமார சாமி பேட்டி அளித்துள்ளார். 

மதியம் 2:04 – இடைத் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த ஒன்றுதான் என கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி என்.டி.டீ.வி.-க்கு பேட்டி அளித்துள்ளார். 

மதியம் 2:01

மதியம் 1:59 – காங்கிரஸ் வேட்பாளர் வி.எஸ். உக்ரப்பாபெல்லாரி தொகுதியில் 2.4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் சாந்தாவை வென்றுள்ளார்.

மதியம் 1:16 – மாண்டியா எம்.பி. தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தளத்தின் சிவராமகவுடா 3.24 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

மதியம் 1:14 – வெற்றி குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி அளித்த பேட்டியில், “எங்கள் கூட்டணி வேலைக்கு ஆகாது என்று பாஜக சொல்லியது. ஆனால் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். மக்கள் பாஜகவுக்கு பாடம் கற்பித்து விட்டனர்.” என்று கூறியுள்ளார். 

மதியம் 1:11 – “ எங்கள் கூட்டணியை பலரும் விமர்சித்தனர். நாங்கள் இன்னும் திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் சிவமொகாவிலும் வெற்றி பெற்றிருப்போம்” என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். 

மதியம் 1:05 – பாஜக வேட்பாளர் ராகவேந்திரா சிவமொகா தொகுதியில் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் எஸ். மது பங்காரப்பாவை வென்றுள்ளார். ராகவேந்திரா முன்னாள் முதல்வர் எட்டியூரப்பாவின் மகன்.

மதியம் 12:47 – ”பாஜகவுக்கு அறநெறிகள் மீது நம்பிக்கை இல்லை. அப்படி இருக்கும்போது மற்ற கட்சிகளை குற்றம் சொல்வதற்கு பாஜகவுக்கு உரிமை இல்லை” – டி.கே. சிவகுமார்

மதியம் 12:32 – பெல்லாரி தொகுதியில் மாற்றத்தையும், வளர்ச்சியையும் மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்று என்.டி.டீ.வி.-க்கு அளித்த பேட்டியில் சிவகுமார் கூறியுள்ளார். 

மதியம் 12:30 – தேர்தல் அறிவித்த நாளில் இருந்தே வியூகம் அமைத்து சிறப்பாக செயல்பட்டோம் என என்.டி.டீ.வி.-க்கு சிவகுமார் பேட்டி.

மதியம் 12:24 –காங்கிரசின் வெற்றி குறித்து அக்கட்சியின் முக்கிய தலைவர் டி.கே.சிவ குமார் கூறுகையில், “ தென்னிந்தியாவை பொறுத்தவரையில் இங்குள்ளவர்களிடம் ராமர் கோயில் கட்டுவோம் என்று சொல்லி வாக்குகளை பெற முடியாது. இங்கு மக்கள் வாக்களித்தால் தங்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். சமூக பொருளாதார நிலைமை தங்களுக்கு உயருமான என்பதுதான் இங்குள்ள வாக்காளர்களின் எதிர்பார்ப்பு” என்று கூறியுள்ளார்.

மதியம் 12:10 – காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தனது ட்விட்டர் பதிவில் “ கர்நாடக மக்களுக்கு குறிப்பாக பெல்லாரி தொகுதி மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வரலாறு காணாத வெற்றியை பெற்றிருக்கிறோம். மக்களின் ஆதரவால் ராகுல் காந்தியின் வழிகாட்டதலால் இந்த வெற்றி சாத்தியம் அடைந்துள்ளது” என்று கூறியுள்ளார். 

மதியம் 12:09 – ஜம்காண்டி எம்.எல்.ஏ. தொகுதியில் காங்கிரசின் சித்து நியாமகவுடா 39,480 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ஸ்ரீகாந்த் குல் கர்னியை தோற்கடித்துள்ளார். 

மதியம் 12:08 – முதல்வர் எச்.டி. குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி ராம்நகர் எம்.எல்.ஏ. தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

காலை 11:45 – காங்கிரஸ் தொண்டர்கள் பெங்களூரு கட்சி அலுவலகத்தில் பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

636771015334393423.

காலை 11:26 – ப. சிதம்பரம் வாழ்த்து : கர்நாடக இடைத்தேர்தலில் 4-1 என்ற கணக்கில் காங்கிரஸ் – ம.ஜ.த. கூட்டணி முன்னிலை வகிப்பதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வாழ்த்து கூறியுள்ளார்.

காலை 11:22 – மாண்டியா தொகுதியில் ஐக்கிய ஜனதா தளத்தின் சிவராமகவுடா பாஜக வேட்பளர் சித்தராமையாவை விட 1,60,277 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை

காலை 11:13 – காங்கிரஸ் – ம.ஜ.த. கட்சிகள் புரிந்துணர்வுடன் செயல்பட்டதால் மாபெரும் வெற்றி கிடைத்திருப்பதாக முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

காலை 10:47 – மதசார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி இடைத்தேர்தல் நடைபெறும் 5-ல் 4 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. சிவமொகாவில் பாஜக முன்னிலை.

காலை 10:29 – பெல்லாரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கிறார். 9-வது சுற்றின் முடிவில் 1.4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

காலை 10:25 – மாண்டியா மக்களவை தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தளத்தின் சிவராமகவுடா, பாஜகவின் சித்தராமையாவை விட முன்னிலை

காலை 10:15 – 9-வது சுற்றின் முடிவில் ராமநகராவில் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் அனிதா குமாரசாமி 47,241 வாக்குகள் முன்னிலை

காலை 10:11 – பெல்லாரி தொகுதியில் 7-வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா 1,18,856 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

காலை 10:02 – மாண்டியா எம்.பி. தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தள வேட்பாளர் சிவராமகவுடா 20,633 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

காலை 10:00 – ஜம்காண்டி தொகுதியில் காங்கிரசின் அனந்த் சித்து நியாமகவுடா 16,516 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை (7-வது சுற்றின் முடிவு)

காலை 9:47 – சிவமொகா தொகுதியில் பாஜகவின் ராகவேந்திரா 2,627 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

காலை 9:44 – 5- சுற்றுகள் முடிவில் ராமநகரத்தில் மதசார்பற்ற ஜனதா தள வேட்பாளர் அனிதா குமாரசாமி 23,596 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

காலை 9:42 – 5 சுற்றுகள் முடிவில் பல்லாரி எம்.பி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வி.எஸ். உக்ரப்பா 84,257 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை

காலை 9:40 – 2 சுற்றுகள் முடிவில் சிவமொகா எம்.பி. தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தளத்தின் மதுபங்காரப்பா 1,414 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

காலை 9:27 – முதல் சுற்று முடிவில் சிவமொகா எம்.பி. தொகுதியில் பாஜக வேட்பாளர் ராகவேந்திரா மத சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் மதுபங்காரப்பாவை விட 3,906 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை.

காலை 9:23 – 4-வது சுற்று முடிவில் ஜம்காண்டி எம்.எல்.ஏ. தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சித்து நியாமகவுடா, பாஜக வேட்பாளர் குல்கர்னி ஸ்ரீகாந்தை விட 7149 வாக்குகள் முன்னிலை.

காலை 9:15 – பல்லாரி எம்.பி. தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வி.எஸ்.உக்ரப்பா முன்னிலை

காலை 9:00 - 3 எம்.பி. தொகுதிகள் மற்றும் 2 எம்.எல்.ஏ. தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 3-ம் தேதி நடந்தது.

காலை 8:56 – சிவமொகா எம்.பி. தொகுதியில் எட்டியூரப்பாவும், பல்லாரி எம்.பி தொகுதியில் ஸ்ரீராமலுவும், மாண்டியா எம்.பி. தொகுதியில் புட்டராஜுவும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் அங்கு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
ஜம்காண்டி சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சித்து நியாம்கோடா காலமானார். ராம்நகரா எம்.எல்.ஏ. தொகுதியில் முதல்வர் குமாரசாமி ராஜினாமா செய்தார். இதனால் இவ்விரு சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

காலை 8:40 -  5 தொகுதிகளிலும் மொத்தம் 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி, பாஜக மாநில தலைவர் எட்டியூரப்பாவின் மகன் ராகவேந்திரா, முன்னாள் முதல்வா பங்காரப்பாவின் மகன் மது பங்காரப்பா உள்ளிட்டோர் நட்சத்திர வேட்பாளர்கள்.

காலை 8:37 - வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி விட்டது. மொத்தம் 1,248 பணியாளர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காலை 8:29 – மதச்சார்பற்ற ஜனதா தளத்திடம் இருந்து மாண்டியா மக்களவை தொகுதியை கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டுகிறது. ம.ஜ.த.வின் உறுப்பினர் புட்டராஜு மேல்கோட் சட்டமன்ற உறுப்பினராக தேர்வானதால் மாண்டியா மக்களவை உறுப்பினர் பதவி காலியாக உள்ளது.

காலை 8:26 – வாக்குகளை எண்ணுவதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

காலை 8:17- பல்லாரி தொகுதியின் வெற்றி காங்கிரஸின் மூத்த தலைவர் சிவக்குமாரையும் சோதிக்கும். காரணம், இவர் தான் மஜத - காங்கிரஸ் இடையில் கூட்டணி உருவாக முக்கிய பங்காற்றினார். 

காலை 8:04 - 3 லோக்சபா தொகுதிகளுக்கும், 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது.

636770882289325905.

காலை 7:45 - பஜக வசம் இருக்கும் பல்லாரி தொகுதியை இந்த முறை ஆளுங்கூட்டணி தட்டிப் பறிக்க முயன்றுள்ளது. பாஜக சார்பில் கட்சியின் மூத்த தலைவர் ஸ்ரீராமுலுவின் தங்கை சாந்தா-வை களமிறக்கியுள்ளது. ஸ்ரீராமுலு இந்தத் தொகுதியிலிருந்து எம்.பி ஆக பொறுப்பேற்றிருந்தார். அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் தனது பதவியை ராஜினாமா செய்யவே, இடைத் தேர்தல் நடத்தும் சூழல் உருவானது.

காலை 7:42- பல்லாரி பகுதியில் 8 சட்டமன்ற தொகுதிகல் இருக்கின்றன. கடைசியாக நடந்த தேர்தலில் இந்த 8-ல் 6 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது

காலை 7:23- இடைத் தேர்தல்களின் முடிவுகள் அடுத்து வரவுள்ள லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

.