Karnataka bypolls: 17 சட்டசபை தொகுதிகளில் 15 இடங்களுக்கு இடைத்தேர்தல நடைபெற்றது.
Bengaluru: இன்று கர்நாடக மாநிலத்தில் இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டது. 12 இடங்களில் பாஜக ஒன்பது இடங்களில் வெற்றி பெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தல்களில் தேர்தல் நடந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இந்நிலையில் “நாங்கள் தோல்வியை ஏற்றுக் கொண்டோம். மக்கள் தவறிழைத்தவர்களை ஏற்றுக் கொண்டனர்” என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறினார்.
ஜூலைமாதம் ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களின் 17 சட்டசபை தொகுதிகளில் 15 இடங்களுக்கு இடைத்தேர்தல நடைபெற்றது. காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளகூட்டணி தோல்வியை தழுவியது
பாஜக குறைந்த பட்சம் 7 இடங்களில் வெற்றி பெற்றால்தான் ஆட்சி பெரும்பான்மையை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் பாஜக கூடுதல் தொகுதிகளை வெற்றிபெற்று தன் ஆட்சியை தக்கவைத்துள்ளது. பாஜகவில் 105 எம்.எல்.ஏக்கள் மற்றும் ஒரு சுயோட்சையின் ஆதரவு உள்ளது.