This Article is From Dec 05, 2019

கர்நாடகாவில் 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்!

கர்நாடகா சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 225 தொகுதிகளில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு தனது பெரும்பான்மை தக்கவைக்க இந்த தேர்தலில் குறைந்தது 6 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும்.

மாபெரும் அளவில் வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்ய முன்வர வேண்டும் என எடியூரப்பா கேட்டுக்கொண்டுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • Bypolls are being held in 15 assembly constituencies across Karnataka
  • Polling began at 7 am and will continue till 6 pm
  • 37.78 lakh people are expected to cast their votes
Bengaluru:

கர்நாடகாவில், காலியாக உள்ள 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி நடந்தபோது, இக்கட்சிகளை சேர்ந்த 17 எம்எல்ஏ.க்கள் பாஜகவுக்கு தாவினர்.

அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால், இத்தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டன. இதனால், காங்கிரஸ் - பாஜ கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, எடியூரப்பா தலைமையில் பாஜ ஆட்சி அமைத்தது. இந்நிலையில், காலியாக உள்ள 17 தொகுதிகளில் ராஜராஜேஸ்வரி நகர், மஸ்கி தொகுதிகளைத் தவிர மற்ற 15 தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. 

இந்த தேர்தல் ஆளும் பாஜகவுக்கும், பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மஜத.வுக்கும் பெரும் சவாலாக உள்ளன. இத்தேர்தலில் குறைந்தப்பட்சம் 7 முதல் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பாஜ ஆட்சி பெரும்பான்மை பலத்துடன் நீடிக்கும். இல்லை என்றால், ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும். இதனால், வெற்றியை கைப்பற்ற இருதரப்பும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 

இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளில், 12 இடங்கள் காங்கிரஸ் வசமும், எஞ்சிய மூன்று இடங்கள் மதச்சார்பற்ற ஜனதா தளம் வசமும் இருந்தன. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 16 பேரில், 13 பேருக்கு பாரதிய ஜனதா சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இவர்கள் அனைவரும் 2018 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற அதே தொகுதிகளில் இம்முறையும் களமிறக்கப்பட்டு்ள்ளனர். இதில் அனைத்துத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 12 இடங்களில் மட்டுமே போட்டியிடுகின்றது. 

தொடர்ந்து, 15 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 9ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. அன்று பகல் 12 மணிக்குள் வெற்றி விவரம் தெரியும்.

(With inputs from PTI)

.