Read in English
This Article is From Jul 07, 2019

ராஜினாமா செய்த 11 கர்நாடக எம்.எல்.ஏக்கள் மும்பை ஹோட்டலில் தங்க வைக்கப்ப்பட்டுள்ளனர்

12-ம் தேதி கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில் 14 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • 11 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
  • ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டால் ஆட்சி கலையும் வாய்ப்பு உள்ளது
  • காங்கிரஸ், ஜனதாதளம் கூட்டணியில் முரண்பாடுகள் நீடித்து வருகிறது
Bengaluru:

கர்நாடகத்தில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த கூட்டணி ஆட்சிக்கு நியமன எம்.எல்.ஏ உட்பட 225 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் 120 பேரின் ஆதரவு இருந்து வருகிறது. அமைச்சர் பதவி கிடைக்காமல் பலர் அதிருப்தியில் உள்ளனர். இதைப்பயன்படுத்தி குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்க 105 எம்.எல்.ஏக்களை பாரதிய ஜனதா குதிரை பேரம் நடத்த தொடங்கியுள்ளதாக தெரிகிறது. 

இந்நிலையில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ரமேஷ் ஜார்ஜிகோளி, ஆன்ந்த் சிங்க் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால், அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ் குமார் இன்னும் ஏற்கவில்லை.

இந்நிலையில் காங்கிரஸ்  மற்றும் ஜனதாதளம் கட்சிகளை சேர்ந்த 12 எம்.எல்.ஏக்கள் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்து இதற்கான கடிதங்களை சபாநாயகர் ரமேஷ் குமார் இல்லாத நிலையில், அவரது செயலாளரிடம் கொடுத்தனர். பின்னர் அந்த எம்.எல்.ஏக்களில் 11 பேர் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் வாஜூவாய் வாலாவை சந்தித்து பேசினார்கள். பின் மும்பைக்கு விமானம் மூலம் சென்றனர்.

Advertisement

மேலும் 5 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை இன்னும் ஓரிரு நாட்களில் ராஜினாமா செய்யலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால்  குமாராசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்காவிலிருந்து இன்று இரவு முதலமைச்சர் குமாரசாமி பெங்களூருக்கு திரும்புகிறார். 

வரும் 12-ம் தேதி கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில் 14 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சிகளின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 10 பேர் மும்பையில் உள்ள சோபிடெல் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 


 

Advertisement