Read in English
This Article is From Jun 21, 2018

ஜே.சி.பி.யில் ஊர்வலம் சென்ற மணமக்கள் வைரலான வினோத திருமணம்

ஜேசிபி ஆப்பிரரேட்டராக பணியாற்றி வரும் மணமகன் தனது பணிக்கு உதவியாக இருந்த ஜேசிபி இயந்திரத்தின் மீது கொண்ட அன்பை தன் திருமணத்தில் வெளிப்படுத்தி உள்ளார்

Advertisement
விசித்திரம்

இந்த வினோத திருமண ஊர்வலம் சமூக வலைத்தளங்களில் வைரலானது

திருமணங்களின் போது, ஆடம்பர கார், குதிரை ஆகியவற்றின் மீது மணமக்களை ஏற்றிக் கொண்டு வரவேற்பு ஊர்வலம் வருவது வழக்கம். ஆனால், கர்நாடகாவில் நடைப்பெற்ற திருமணம் கொஞ்சம், இல்லை ரொம்பவே வித்தியாசமாக மணமக்கள் ஊர்வலம் நடந்துள்ளது. ஜேசிபி இயந்திரத்தில் மணமக்கள் ஜோடியாக் அமரவைக்கப்பட்டு, ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைராலானது.

ஜேசிபி ஆப்பிரரேட்டராக பணியாற்றி வரும் மணமகன் தனது பணிக்கு உதவியாக இருந்த ஜேசிபி இயந்திரத்தின் மீது கொண்ட அன்பை தன் திருமணத்தில் வெளிப்படுத்தி உள்ளார். ஜேசிபி இயந்திரத்தின் முன் பகுதியில் உள்ள பக்கெட்டில் உட்கார்ந்தபடி மணமக்கள் சுற்றி வந்தனர்.

கர்நாடகா மாநிலம் புத்தூர் பகுதியைச் சேர்ந்த சேத்தன் மற்றும் மம்தாவின் இந்த வினோத திருமண ஊர்வலத்துக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளும் அன்பும் குவிந்துள்ளது.

Advertisement



வண்ண பலூன்களாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட ஜேசிபியில் மணமக்களை ஏற்றிச் செல்லும் வழியில், மேள தாளங்களுடன் திருமண கொண்டாட்டங்களில் ஊர் மக்கள் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement
“நான் செய்யும் பணியை மிகவும் நேசிக்கறேன். என் பணிக்கு உதவியாக இருக்கும் வாகனதிற்கு செலுத்தும் நன்றியாக இந்த முயற்சியை எடுத்துள்ளேன்” என்றார்.
மணமகனின் நண்பர் ஜேசிபியை ஓட்டிச்செல்ல, மணமக்கள் ஜேசிபியில் உட்கார்ந்தபடி அழைத்து செல்லப்பட்டனர். சமூக வலைத்தளங்களில் பலரும், மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.​
Advertisement