This Article is From Jul 10, 2019

சிவகுமாரின் அறை முன்பதிவை ரத்து செய்த மும்பை ஓட்டல்!

கர்நாடக அரசியல் நெருக்கடி: டி.கே.சிவகுமார் தனது பெயரில் எந்த அறையும் முன்பதிவு செய்யவில்லை என காவல்துறையினர் கூறினார், ஆனால் ஓட்டலில் எனது பெயரில் ஒரு அறையை முன்பதிவு செய்ததாக சிவக்குமார் கூறினார்.

சிவகுமாரின் அறை முன்பதிவை ரத்து செய்த மும்பை ஓட்டல்!

மும்பை நட்சத்திர ஓட்டலில் டி.கே.சிவக்குமார் அறை ஒன்றை முன்பதிவு செய்துள்ளார்.

Mumbai:


கர்நாடகாவில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை சமாளிக்க, மும்பையில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் அதிருப்தி எம்எல்ஏக்களை நேரில் சந்திக்க திட்டமிட்டு, அவர்கள் தங்கியிருந்த அதே விடுதியிலே சிவக்குமாரும் அறை முன்பதிவு செய்திருந்தார். எனினும், அவசரநிலை காரணமாக சிவக்குமார் முன்பதிவு செய்த அறையை அந்த ஓட்டல் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. 

மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும் அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திக்க கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி இன்று மும்பை செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து, அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் மாநிலத் தலைவர் உட்பட யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்றும் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என மும்பை காவல்துறைத் தலைமை அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

எனினும், மும்பை விமான நிலையத்தில் இருந்து நேராக சொகுசு விடுதிக்கு சென்ற கர்நாடக அமைச்சர் சிவக்குமாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் அவர் விடுதிக்குள் செல்ல அனுமதி மறுத்தனர். தொடர்ந்து, போராட்டகாரர்கள் 'கோபேக்' என எதிர்ப்பு குரல் எழுப்பினர். 

தொடர்ந்து, தான் அந்த ஓட்டலில் அறை முன்பதிவு செய்துள்ளதாகவும், தன்னை தன் அறைக்கு செல்ல அனுமதிக்குமாறும், அங்குள்ள சகோதரர்களுடன் நிதானமாக தேநீர் அருந்தியபடியே பேச வேண்டும் என்று அவர் காவல்துறையினரிம் கூறியுள்ளார். மேலும், அனுமதி மறுத்தாலும் நான் திரும்பி செல்ல மாட்டேன். நாள் முழுவதும் இங்கு காத்திருப்பேன் என்று அவர் போலீசாரிடம் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சிவக்குமார் கூறும்போது, இந்த எதிர்ப்பு குரல்களுக்கு பயந்தவன் நான் அல்ல, நான் தனியாகவே வந்தேன், தனியாகவே உயிரிழப்பேன் என்று அவர் கூறினார். மேலும், அவர் சிவக்குமார் தான் அந்த ஓட்டலில் உள்ள அறையை முன்பதிவு செய்துள்ளதாகவும், அதனால் தன்னை தடுத்து நிறுத்த முடியாது என்று கூறினார். இதனிடையே, அவசரநிலை காரணமாக சிவக்குமார் முன்பதிவு செய்த அறையை அந்த ஓட்டல் நிர்வாகம் ரத்து செய்தது. 

.