This Article is From Jul 21, 2020

பைக்கை தொட்டதால் தலித் குடும்பம் மீது சரமாரி தாக்குதல்! - கர்நாடகாவில் அதிர்ச்சிகர சம்பவம்

எஸ்சி / எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 143,147, 324, 354, 504, 506, 149 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பைக்கை தொட்டதால் தலித் குடும்பம் மீது சரமாரி தாக்குதல்! - கர்நாடகாவில் அதிர்ச்சிகர சம்பவம்

தலித் குடும்பம் மீதான தாக்குதல் சனிக்கிழையன்று நடந்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • பைக்கை தொட்டதன் காரணமாக தலித் இளைஞர் அவரது குடும்பத்தினர் மீது தாக்குதல்
  • கால்களாலும் தடித்த கம்புகளை கொண்டும் தாக்குவது வீடியோவில் பதிவாகியுள்ளது.
  • (ஐபிசி) 143,147, 324, 354, 504, 506, 149 பிரிவுகளில் பதியப்பட்டுள்ளது
Vijaypura, Karnatajka:

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் பெரும் பாதிப்பு பாதிப்புகளையும் மாற்றங்களையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கக்கூடிய நிலையிலும், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உயர் சாதியினர் என்று அழைக்கப்படுகிற ஒருவரின் பைக்கை தொட்டதன் காரணமாக தலித் இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.

மாநில தலைநகரான பெங்களூரூவிலிருந்து 530 கி.மீ தொலைவில் உள்ள விஜயபுரா மாவட்டத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட தலித் நபரை கும்பல் ஒன்று சேர்ந்து கால்களாலும் தடித்த கம்புகளை கொண்டும் தாக்கும் காட்சிகள் வீடியோவாக வெளிவந்துள்ளன. தாக்குதலில் மீண்ட நபர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

“மினாஜி கிராமத்தைச் சேர்ந்த தலித் நபர் ஒருவர், உயர் சாதியினர் என தங்களை அழைத்துக் கொள்ளப்படுபவரின் பைக்கை தற்செயலாக தொட்டதன் காரணமாக 13 பேர் கொண்ட கும்பலால் தலித் நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கப்பட்டிருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.” என மூத்த போலீஸ் அதிகாரி அனுபம் அகர்வால் கூறியுள்ளார். மேலும், “எஸ்சி / எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 143,147, 324, 354, 504, 506, 149 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் விசாரிக்கப்பட்டுவருகின்றனர்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் தனி மனித இடைவெளி மற்றும் முககவசத்தினை கட்டாயமாக அணிய வேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வெளிவந்த வீடியோவில், தனி மனித இடைவெளி மற்றும் முககவசம் போன்றவற்றை தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் கடைப்பிடிக்கவில்லை. பாதிக்கப்பட்ட தலித் நபரை சிலர் தரையில் தள்ளி தாக்குவதை வீடியோவில் காணமுடிகின்றது.

கர்நாடகாவில் கொரோனா தொற்று எண்ணிக்கையானது கடந்த 24 மணி நேரத்தில் 4,000ஆக பதிவாகியிருந்தது. இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 63,772 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கர்நாடகா மாநிலம் தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.