Read in English
This Article is From Aug 13, 2019

கர்நாடக வெள்ளத்தில் 48 பேர் உயிரிழப்பு!! 4 லட்சம்பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம்!

நிவாரண உதவியாக மத்திய அரசு ரூ. 1000 கோடியை வழங்க வேண்டும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா வலியுறுத்தி உள்ளார்.

Advertisement
இந்தியா Written by , Edited by

7 லட்சம்பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Bengaluru:

கர்நாடகாவில் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. 7 லட்சம்பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ள நிலையில் 4 லட்சம்பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இன்னும் சில நாட்களில் மழை படிப்படியாக குறைந்து இயல்பு நிலையை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெலகாவி மாவட்டம்தான் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. 
 

அங்கு மட்டும் குறைந்தது 31 பேர் உயிரிழந்திருக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு சுமார் 3 லட்சம்பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளார்கள். இந்த நிலையில் சிவமொகா மாவட்டத்தில் முதல்வர் எடியூரப்பா வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மத்திய அரசிடம் நிவாரண நிதியாக ரூ. 1000 கோடியை கேட்டிருப்பதாக தெரிவித்தார்.

வெள்ளத்தால் சுமார் 6  ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கர்நாடக அணைகள் நிரம்பி வழிவதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. 

மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விமானப்படை மட்டும் சுமார் 700 பேரை வெள்ளத்திலிருந்து மீட்டுள்ளது. இதற்காக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

கடந்த வாரம் உள்துறை அமைச்சர் அமித் ஷா கர்நாடகத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் அதிகாரிகளுடன் நிலைமை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். மழை குறையும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. 

Advertisement

Advertisement