நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 25-யை பாஜக கைப்பற்றியது.
Bengaluru: கர்நாடகத்தில் நடந்து முடிந்துள்ள உள்ளாட்சி தேர்தலில் பாஜகவை விட காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. மே 29-ம்தேதி கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 30 மாவட்டங்களில் 22 -ல் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
63 நகராட்சிகளுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 562 இடங்களை கைப்பற்ற உள்ளது. பாஜகவுக்கு 406 இடங்களும், ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு 202 இடங்களும் கிடைத்துள்ளன.
இருப்பினும் இட ஒதுக்கீட்டு பிரச்னை வழக்கு காரணமாக பெங்களூரு நகர்ப்புறம் மற்றும் ஷிவமொகா ஆகிய 2 மாவட்டங்களில் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 25-யை பாஜக கைப்பற்றியது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் பாஜகவை விட காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. இது காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ஆறுதலை அளித்துள்ளது.