Read in English
This Article is From Jul 09, 2020

'சின்னசாமி கிரிக்கெட் மைதானம் கொரோனா சிகிச்சை முகாமாக மாற்றப்படும்' - கர்நாடக அரசு அறிவிப்பு

கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்து 877 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 11 ஆயிரத்து 876 பேர் குணம் அடைந்துள்ளனர்.

Advertisement
இந்தியா

அவசர தேவைகளுக்காக சுமார் 600 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

Bengaluru :

பிரபல  பெங்களூரூ சின்னசாமி கிரிக்கெட் மைதானம் கொரோனா சிகிச்சை முகாமாக மாற்றப்படும் என்று கர்நாடக அரசு இன்று அறிவித்துள்ளது. 

முன்னதாக பெங்களூரு  சர்வதேச கண்காட்சி மையம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு அங்கு பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அடுத்த நடவடிக்கையாக கிரிக்கெட் மைதானம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா பாதிப்புகள் கணிசமாக அதிகரித்து வருகிறது.

இருப்பினும் மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், கொரோனாவை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. 

Advertisement

அவசர தேவைகளுக்காக சுமார் 600 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்து 877 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 11 ஆயிரத்து 876 பேர் குணம் அடைந்துள்ளனர்.

Advertisement

தற்போது 16,531 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை எடுத்து வருகிறார்கள்.  தற்போது வரை மாநிலத்தில் 470 பேர் உயிரிழந்துள்ளனர்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement