Read in English
This Article is From Mar 28, 2020

சமூக பரவலாக மாறிவிட்டதா கொரோனா? பீதியை கிளப்பும் கர்நாடக முதியவரின் மரணம்!!

கர்நாடகாவில் 70 வயது பெண்ணும், 76 வயதான ஆணும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இந்தியாவில் கொரோனா தொற்று 700-க்கும் அதிகமானோருக்கு ஏற்பட்டிருக்கிறது. அவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.  

Advertisement
இந்தியா Edited by

குறைந்தது 24 பேர் உயிரிழந்த முதியவருடன் நேரடி தொடர்பில் இருந்துள்ளனர்.

Bengaluru:

கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 65 வயது நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரவில்லை. வெளிநாட்டு நபர்களுடன் தொடர்பில் இல்லை. ஆனால் அவர், கடந்த 5-ம்தேதி டெல்லிக்கு ரயிலில் சென்றுவிட்டு, மார்ச் 11-ம்தேதி மீண்டும் ரயிலில் திரும்பியதுதான் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இது கொரோனா சமூக பரவல் என்ற அபாய கட்டத்தை எட்டி விட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. 

மார்ச் 7-ம்தேதி அவர் டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்திற்கு வந்தார். ஜாமியா மசூதியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். இதனால் அந்த நபருடன் பழகியவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. 

Advertisement

மார்ச் 11-ம்தேதி பெங்களூருவின் யெஷ்வந்த்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த அவர், அங்கிருந்து பஸ் மூலம் மார்ச் 14-ம்தேதி சொந்த ஊரான சீராவுக்கு சென்றுள்ளார். 

மார்ச் 18-ம் தேதிதான் அவருக்கு கொரோனா பாதித்த அறிகுறிகள் தென்பட்டன. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பிய அவருக்கு, நிலைமை மேலும் மோசமானது.

Advertisement

மார்ச் 23-ம்தேதி அவரை அரசு மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்துள்ளனர். நேற்று அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று காலை 10.30-க்கு உயிரிழந்துள்ளார். 

அவருடன் ரயிலில் பயணம் செய்த பயணிகள் விவரம் சேகரிக்கப்பட்டு வருவதாக தும்குரு மாவட்டத்தின் சப் கலெக்டர் ராகேஷ் குமார் தெரிவித்துள்ளார். உயிரிழந்த முதியவருடன் குறைந்தது 24 பேர் நேரடி தொடர்பில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவர்களுக்கும் கொரோனா இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் மற்றவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தால் அவர்களுக்கும் கொரோனா பரவலாம்.

Advertisement

முன்னதாக கர்நாடகாவில் 70 வயது பெண்ணும், 76 வயதான ஆணும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இந்தியாவில் கொரோனா தொற்று 700-க்கும் அதிகமானோருக்கு ஏற்பட்டிருக்கிறது. அவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.  

Advertisement