This Article is From Aug 21, 2018

வெள்ள நிவாரண முகாமில் இருந்த மக்களுக்கு பிஸ்கட் வீசிய கர்நாடக அமைச்சர்..!

ரெவானா, மக்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை தூக்கி போடும் காட்சி, வீடியோவாக படம் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது

வெள்ள நிவாரண முகாமில் இருந்த மக்களுக்கு பிஸ்கட் வீசிய கர்நாடக அமைச்சர்..!
Bengaluru:

கர்நாடகாவின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பலர் அவசரகால நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அப்படியொரு நிவாரண முகாமில் இருந்த மக்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை வீசியுள்ளார் கர்நாடக மாநில பொதுப் பணித் துறை அமைச்சரும் முதல்வரின் சகோதருரமான ஹெச்.டி.ரெவானா. அவரின் செயல் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

ரெவானா, மக்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை தூக்கி போடும் காட்சி, வீடியோவாக படம் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இந்த வீடியோ வைரலாகவே, ரெவானாவின் செயலை எதிர்கடசியான பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

 

 

விஷயம் பூதாகரமானதை அடுத்து கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி, ‘நான் இந்த விஷயம் குறித்து கேள்விப்பட்டேன். ரெவானாவிடமும் நான் விஷயம் குறித்து கேட்டறிந்தேன். அவர் சென்ற முகாமில் மிக அதிக அளவிலான மக்கள் இருந்துள்ளனர். அவர்கள் நகரக் கூட இடமில்லாமல் இருந்துள்ளது. அதனால் தான் ரெவானா பிஸ்கட் பாக்கெட்டுகளை தூக்கி எறிந்துள்ளார்’ என்று அமைச்சரின் செயலுக்கு நியாயம் கற்பித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் ரெவானா, ‘நான் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது மிகவும் வருந்த வைக்கிறது. நான் பிஸ்கட்டுகளை யாரையாவது விநியோகிக்கச் சொல்லி இருந்தால் இந்தப் பிரச்னையே வந்திருக்காது’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

.