Read in English
This Article is From Jul 10, 2019

சந்திக்க மறுக்கும் அதிருப்தி எம்எல்ஏக்கள்! ஓட்டல் வெளியே காத்திருக்கும் காங்., தலைவர்!!

மும்பை விமான நிலையத்தில் இருந்து நேராக சொகுசு விடுதிக்கு சென்ற சிவக்குமாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் அவர் விடுதிக்குள் செல்ல அனுமதி மறுத்தனர். தொடர்ந்து, போராட்டகாரர்கள் ’கோபேக்’ என குரல் எழுப்பினர்.

Advertisement
Karnataka Edited by
Bengaluru:

கர்நாடகாவில் நிகழும் ஒவ்வொரு அரசியல் நெருக்கடி காலத்திலும், அதனை சுமூகமாக பேசி தீர்ப்பவராக விளங்குபவர் அம்மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார். அந்தவகையில், கர்நாடகாவில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை சமாளிக்க, மும்பையில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் அதிருப்தி எம்எல்ஏக்களை நேரில் சந்திக்க திட்டமிட்டார்.

இதனிடையே, ஓட்டலில் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திக்க கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி இன்று மும்பை செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து, அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் மாநிலத் தலைவர் உட்பட யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்றும் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என மும்பை காவல்துறைத் தலைமை அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

எனினும், மும்பை விமான நிலையத்தில் இருந்து நேராக சொகுசு விடுதிக்கு சென்ற சிவக்குமாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் அவர் விடுதிக்குள் செல்ல அனுமதி மறுத்தனர். தொடர்ந்து, போராட்டகாரர்கள் 'கோபேக்' என எதிர்ப்பு குரல் எழுப்பினர்.

தொடர்ந்து, தன்னை தன் அறைக்கு செல்ல அனுமதிக்குமாறும், அங்குள்ள சகோதரர்களுடன் நிதானமாக தேநீர் அருந்தியபடியே பேச வேண்டும் என்று அவர் காவல்துறையினரிம் கூறியுள்ளார். மேலும், அனுமதி மறுத்தாலும் நான் திரும்பி செல்ல மாட்டேன். நாள் முழுவதும் இங்கு காத்திருப்பேன் என்று அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சிவக்குமார் கூறும்போது, இந்த எதிர்ப்பு குரல்களுக்கு பயந்தவன் நான் அல்ல, நான் தனியாகவே வந்தேன், தனியாகவே உயிரிழப்பேன் என்று அவர் கூறினார்.

மேலும், அவர் தான் அந்த ஓட்டலில் உள்ள அறையை முன்பதிவு செய்துள்ளதாகவும், அதனால் தன்னை தடுத்து நிறுத்த முடியாது என்று கூறினார். இதனிடையே, அவசரிநிலை காரணமாக சிவக்குமார் முன்பதிவு செய்த அறையை அந்த ஓட்டல் நிர்வாகம் ரத்து செய்தது.

Advertisement

கர்நாடக சட்டப்பேரவையில் மொத்தம் 224 இடங்கள் உள்ள நிலையில் ஆட்சி அமைக்க 113 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. 37 இடங்களை பெற்றுள்ள மதசார்பற்ற ஜனதா தளமும் 78 எம்எல்ஏக்களை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியும் 115 உறுப்பினர்களின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்தன.

இதில், 13 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் வழங்கியிருப்பதால், தற்போது ஆளுங்கூட்டணியின் பலம் சபாநாயகருடன் சேர்த்து 103 ஆக குறைந்துள்ளது. பாஜகவின் பலம் 105 ஆக உள்ளது. 2 சுயேட்சைகள் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர்.

Advertisement