This Article is From Oct 06, 2018

சொத்து குவிப்பு புகார் : கர்நாடக அரசு அதிகாரி வீட்டில் ரூ. 4.52 கோடி பறிமுதல்

8 வீடுகள், 3 கார்கள், 1.6 கிலோ தங்கம், 7.5 கிலோ வெள்ளி உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement
நகரங்கள் Posted by

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கர்நாடகாவில் ஊழல் தடுப்பு அதிகாரிகள். அரசு அதிகாரி டி.ஆர். சுவாமி என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனை பெங்களூருவில் நடந்தது. இதில், கணக்கில் வராத ரூ. 4.52 கோடி பணம், 3 கார்கள், 1.6 கிலோ தங்கம், 7.5 கிலோ வெள்ளி, 8 வீடுகள், 11 இடங்கள், 14 ஏக்கர் விவசாய நிலம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து ஊழல் தடுப்பு அதிகாரிகள் கூறும்போது, வெள்ளியன்று பெங்களூரு மற்றும் தும்கூர் ஆகிய நகரங்களில் 8 இடங்களில் நாங்கள் சோதனை மேற்கொண்டோம். அரசு அதிகாரிகள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வந்த புகாரின்பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது. என்.ஜி. கவுடையா, சுவாமி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினோம். இதில் கணக்கில் வராத ரூ. 4.52 கோடி பணம், 3 கார்கள், 1.6 கிலோ தங்கம், 7.5 கிலோ வெள்ளி, 8 வீடுகள், 11 இடங்கள், 14 ஏக்கர் விவசாய நிலம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது என்றனர்.

இதேபோன்று, வனத்துறை அதிகாரி சந்திரகவுடா, சுகாதாரத்துறை அதிகாரி மின்சினால் உள்ளிட்டோரின் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
 

Advertisement
Advertisement