Read in English
This Article is From Jul 24, 2019

நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார் எடியூரப்பா!

இதில், குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் பதிவானது, 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.

Advertisement
Karnataka Edited by
Bengaluru:

கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று மாலை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி தலைமையிலான 14 மாத கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. 

கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த 4 நாட்களாக நடந்த வாதத்திற்கு பிறகு நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில், குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் பதிவானது, 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதனால், முதல்வர் பதவியை இழக்கும் நிலையையும் குமாரசாமி அடைந்தார்.

கர்நாடக மாநிலத்தில் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி குமாரசாமி தலைமையில் நடந்தது. கூட்டணிக் கட்சியை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் கடந்த ஒன்றாம் தேதி முதல் ஒருவர் பின் ஒருவராக தங்களது பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர். மேலும் 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் கூட்டணிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றுக்கொண்டு பாஜவுக்கு ஆதரவளிப்பதாக ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்தனர். அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேரின் ராஜினாமா கடிதம் மீதும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்காமல் வைத்திருந்தார். 

இதனால் கூட்டணி அரசுக்கு இருந்த பெரும்பான்மை 117லிருந்து 101 ஆக குறைந்தது. இதையடுத்து 105 எம்எல்ஏக்கள் கொண்ட எதிர்க்கட்சியான பாஜக குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். 

Advertisement

இதைத்தொடர்ந்து, கடந்த 18ஆம் தேதி சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் அறிவித்தார். அதன்படி கடந்த வியாழன் முதல் சட்டப்பேரவையில் வாதம் நடைபெற்றது. இந்த வாதம் நடைபெற்றதால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனிடையே, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி பாஜகவினர் சட்டப்பேரவையில் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். 

இதையடுத்து நீண்ட இழுபறிக்கு பின்னர் நேற்று மாலை 7.15 மணி அளவில் சபாநாயகர் ரமேஷ்குமார், குரல் வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். இதில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகள் மட்டுமே பதிவாகின. எதிராக 105 வாக்குகள் பதிவாகின. இதனால் பெரும்பான்மையை இழந்த மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதனால் முதலமைச்சர் பதவியை இழக்கும் நிலையை குமாரசாமி அடைந்தார்.

Advertisement

இந்நிலையில் பாஜக ஆட்சி அமைப்போம் என எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார். அத்துடன் நம்பிக்கை வாக்கெடுப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து ஆளுநர் வஜுபாய் லாலாவை சந்தித்து அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார். அத்துடன் குமாரசாமி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.


 

Advertisement

Mr Yeddyurappa's last term was just two-and-a-half days old. After being sworn in just after the Karnataka election in May last year, he failed to rack up majority support with the Congress and the JDS zealously guarding their lawmakers and ferrying them in and out of town to stymie attempts to lure them away.

The tables turned within a year. The Congress-JDS coalition struggled with infighting and accused the BJP of working meticulously to divide its ranks and draw away lawmakers as part of what was dubbed "operation kamala (lotus, BJP's symbol)".

Advertisement

Over the past two weeks, the Congress and outgoing Chief Minister HD Kumaraswamy's JDS watched helplessly as 16 lawmakers quit and two independent members pulled out support.

The rebel lawmakers flew to Mumbai and stationed themselves at a five-star hotel where even the Congress's chief troubleshooter DK Shivakumar was turned away.

Advertisement

The rebels refused to return and made it clear that this time, nothing would change their mind. The BJP firmly denied any role in the exodus.

Mr Yeddyurappa has been chief minister in 2007 and 2008, but could never complete a term.

Advertisement