Bengaluru: கர்நாடகாவில் உள்ள 105 நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைப்பெற்று வருகிறது.
இதுவரையில், காங்கிரஸ் 966 இடங்களையும், பாஜக 910 இடங்களையும், மதசார்பற்ற ஜனதா தளம் 373 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. கர்நாடக நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பாஜகவின் சறுக்கலை ஒப்புக்கொண்டுள்ளார் பாஜக மாநில கட்சி தலைவர் எடியூரப்பா. இந்த தேர்தல் குறித்த முக்கிய 10 குறிப்புகள்
- காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி 1399 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையை கைப்பற்றியுள்ளன.
- “பாஜகவிற்கு சாதகமான முடிவையையே எதிர்ப்பார்த்தோம். எனினும் அடுத்து நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் பாஜக சிறப்பான வெற்றி பெரும் என்பது உறுதி” - கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா.
- மைசூரு, ஷிவமொக்கா, துமகூரு ஆகிய மூன்று தொகுதியில் பாஜக சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும், சாம்ராஜ் நகர், தக்ஷின கன்னடா, உடுப்பி, பெல்காம், பாகல்கோட், தாவண்கரே, சித்ரதுர்கா ஆகிய இடங்களிலும் பாஜக முன்னிலை பெற்று வருகிறது.
- பிடார், உத்தர கன்னடா, யதகிரி, பெல்லாரி, கதக், ஆவேரி, குல்பர்கா, கொப்பள், ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.
- ஹாசன், மண்டியா ஆகிய பகுதிகளில் மஜத முன்னிலை பெற்றுள்ளது.
- துமகூரு பகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் இனாயத்துல்லா கானின் வெற்றி கொண்டாடத்தின் போது, மர்ப நபர்கள் ஆசிட் வீசினர். இதனால், 8 பேர் காயம் அடைந்துள்ளனர்.
- கடந்த மே மாதம் நடைப்பெற்ற சட்டசபை தேர்தலில், பாஜக கட்சி அதிக இடங்களை கைப்பற்றி இருந்தாலும், காங்கிரஸ்- மஜத கூட்டணி ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஆகஸ்டு மாதம் நடைப்பெற்ற நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், மொத்தம் 67% வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- வெள்ள பாதிப்பு காரணமாக, குடகு மாவட்டத்தில் தேர்தல் நடைப்பெறவில்லை.
- கடந்த 2013 ஆம் ஆண்டு நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலில், காங்கிரஸ் 1960 இடங்களையும், பாஜக, மஜத ஆகிய கட்சிகள் தலா 905 இடங்களையும், தனித்து போட்டியிட்ட வேட்பாளர்கள் 1206 இடங்களையும் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.