This Article is From Sep 19, 2019

Triple Talaq: வாய்ஸ் மெசேஜ் வழியாக தலாக் சொன்ன கணவர்; மனைவி புகார்

நான் இந்த விவகாரத்தை ஏற்கவில்லை. காவல்துறையில் வழக்கு பதிவு செய்துள்ளேன்.எனக்கு நீதி வேண்டும். கடந்த 21 ஆண்டுகளாக எந்தவித சிக்கலும் இல்லாமலேயே வாழ்ந்தோம்.

Triple Talaq: வாய்ஸ் மெசேஜ் வழியாக தலாக் சொன்ன கணவர்; மனைவி புகார்

என் கணவரும் எங்களுக்கு பண உதவி அளிக்கவில்லை. என் மகளின் படிப்பு சிக்கலாகியுள்ளது

Shivamogga:

கர்நாடகாவைச் சேர்ந்த  பெண் ஒருவர் துபாயில் இருந்தவாறே வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் மூலம் தலாக் சொன்ன கணவர் மீது நடவடிக்கை கோருகிறார்.  முத்தலாக் தடை சட்டம் மூலம் முஸ்லீம் பெண்களுக்கு உடனடியாக கூறி விவாகரத்து செய்வது சட்ட விரோதமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த ஆயிஷா சித்திக்கி தனது கணவர் முஸ்தபா துபாயில் இருந்து வாட்ஸ் ஆப்பில் உள்ள வாய்ஸ் மெசேஜ் வாயிலாக முத்தலாக் கூறியதாக தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அப்பெண் “ எனது கணவர் தலாக் கூறி வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். ஆனால் நான் இந்த விவகாரத்தை ஏற்கவில்லை. காவல்துறையில் வழக்கு பதிவு செய்துள்ளேன்.எனக்கு நீதி வேண்டும். கடந்த 21 ஆண்டுகளாக எந்தவித சிக்கலும் இல்லாமலேயே வாழ்ந்தோம். 

ஆரம்பத்தில் எங்களுக்கு குழந்தை இல்லாத பிரச்சினையைக் கூட அவர் பெரிதாக்கவில்லை. ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்தோம்.இப்போது திடீரென தலாக் கூறுகிறார். நான் அதிகம் படிக்கவில்லை. என் குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்குச் செல்ல இயலாது என் கணவரும் எங்களுக்கு பண உதவி அளிக்கவில்லை. என் மகளின் படி சிக்கலாகியுள்ளது” என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி கொண்டு வந்த முத்தலாக் தடை சட்டத்தை நான் வரவேற்கிறேன். எனக்கு நியாயம் கிடைக்க பிரதமர் மோடி உதவ வேண்டுமென அப்பெண் கூறியுள்ளார். 

.