This Article is From Dec 04, 2018

காங்கிரஸின் தவறை திருத்துவதுதான் என் தலைவிதி -பிரதமர் நரேந்திர மோடி

காங்கிரஸ் தலைவர்களுக்கு குருநானாக் தேவின் முக்கியத்துவம் குறித்து எந்தவொரு சிந்தனையும் இல்லை என்று குற்றம்சாட்டினார். மேலும், ஹர்தாபூர் இன்று பாகிஸ்தானில் இருக்க காரணம் ஏன்..? கூட்டத்தை நோக்கி கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸின் தவறை திருத்துவதுதான் என் தலைவிதி -பிரதமர் நரேந்திர மோடி

எல்லைகளை உருவாக்கியவரின் அடிப்படைத் தவறினால் தான் தாமதமானது

Hanumangarh, Rajasthan:

பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநில ஹனுமங்கரில் நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது காங்கிரஸ் தலைவர்களுக்கு தொலைநோக்கு பார்வை இல்லாததானல் சீக்கியர்களின் புனித தலமான ஹர்தாபூரை குறித்து மக்களின் உணர்வை புரியாத தன்மையினாலும் ஹர்தாபூர் பாகிஸ்தானின் எல்லைக்குள் உள்ளது என்று குற்றம் சாட்டினார்.

டிசம்பர் 7 அன்று ராஜஸ்தானின் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் ஹர்தாபூரில் வாக்கு சேகரிப்பிற்கான பொதுக் கூட்டத்தில் பேசினார். கடந்த 70 வது வருடத்தில் ஹர்தாபூர் காரிடர் ஏன் செயல்படவில்லை என்பதற்கு காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும் என்றார். "காங்கிரஸ் செய்த தவறுகளை திருத்துவதுதான் என் விதி” என்று கூறினார். 

காங்கிரஸ் தலைவர்களுக்கு குருநானாக் தேவின் முக்கியத்துவம் குறித்து எந்தவொரு சிந்தனையும் இல்லை என்று குற்றம்சாட்டினார். மேலும், ஹர்தாபூர் இன்று பாகிஸ்தானில் இருக்க காரணம் ஏன்..? கூட்டத்தை நோக்கி கேள்வி எழுப்பினார். 

ஹர்தாபூர் காரிடர் துவக்கத்தின் போது உள்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி “பல ஆண்டுகளுக்கு முன்பே இதை செயல்படுத்தியிருக்க வேண்டும் எனவும் எல்லைகளை உருவாக்கியவரின் அடிப்படைத் தவறினால் தான் தாமதமானது” என்று பேசியிருந்தார்.

பாகிஸ்தானின் எல்லையையொட்டி சீக்கியர்களின் புனித தலமான ஹர்தாபூர் நவம்பர் 27 அன்று திறந்து வைக்கப்பட்டது. அதன் தொடங்க விழாவில் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
.