This Article is From Aug 01, 2019

“உடனே வீட்டை காலி செய்யுங்க…”- கார்த்தி சிதம்பரத்துக்கு வந்த சோதனை!

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு, சட்டத்துக்குப் புறம்பாக 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு பெற்றுத் தந்ததாக கார்த்தி சிதம்பரத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

“உடனே வீட்டை காலி செய்யுங்க…”- கார்த்தி சிதம்பரத்துக்கு வந்த சோதனை!

இது குறித்து கார்த்தி சிதம்பரத்துக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில், 10 நாட்களுக்குள் டெல்லி வீட்டை ஒப்படைக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளது

ஹைலைட்ஸ்

  • கார்த்தியின் டெல்லி வீட்டைதான் காலி செய்யச் சொல்லி உத்தரவிட்டப்பட்டுள்ளது
  • அமலாக்கத் துறை கார்த்திக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது
  • 10 நாட்களுக்குள் வீட்டை காலி செய்யுமாறு கார்த்திக்கு உத்தரவு
New Delhi:

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிக்கியிருக்கும் சிவகங்கை தொகுதி எம்.பி-யான கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லியில் இருக்கும் ஜோர் பாக்கில் வீடு உள்ளது. அந்த வீட்டை காலி செய்யுமாறு அமலாக்கத் துறை தற்போது அவருக்கு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ஐ.என்.எக்ஸ் வழக்கில், அந்த வீடு பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமலாக்கத் துறை, கார்த்தியின் டெல்லி வீட்டைக் பறிமுதல் செய்தது. 

தற்போது இது குறித்து கார்த்தி சிதம்பரத்துக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில், 10 நாட்களுக்குள் டெல்லி வீட்டை ஒப்படைக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளது. அந்த வீடு கார்த்தி சிதம்பரத்துக்கு மட்டுமல்லாது, அவரது தாயான நளினி சிதம்பரத்துக்கும் சொந்தமானது என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு, சட்டத்துக்குப் புறம்பாக 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு பெற்றுத் தந்ததாக கார்த்தி சிதம்பரத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நடந்த போது, ஐ.என்.எக்ஸ் மீடியாவின் இயக்குநர்களாக இருந்தவர்கள் பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி. 

305 கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுத் தர அப்போது, மத்திய அரசில் அமைச்சராக அங்கம் வகித்த தனது தந்தையான ப.சிதம்ரத்தின் செல்வாக்கை கார்த்தி, தவறுதலாக பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக, சிபிஐ-யும் அமலாக்கத் துறையும் தனித் தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

.