Chennai: சென்னை: மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதனை அடுத்து வழக்கு விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், தி.மு.க தலைவர் கருணாநிதியின் நல்லுடல் மெரினாவில் அடக்கம் செய்வதற்கான உத்தரவை அளித்து தீர்ப்பளித்துள்ளனர். தீர்ப்பு வெளியானைதை அடுத்து, தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கண் கலங்கினார்.
இன்று சென்னை வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கருணாநிதியின் உடலுக்கு மரியாதை செலுத்தினார். முன்னதாக, இன்று காலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் இராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் நல்லுடலை காண ஆயிரக்கணக்கான மக்கள் ராஜாஜி அரங்கத்திற்கு சென்றுள்ளனர்.