CHENNAI: அண்ணா சமாதி அருகே கலைஞர் கருணாநிதியை அடக்கம் செய்ய தி.மு.க தாக்கல் செய்த மனு காலை விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில பதவியில் இருக்கும்போதே காலமான முதலமைச்சர்களுக்கு மட்டுமே மெரினாவில் சமாதி அமைக்க இடம் ஒதுக்கப்பட்டது என்ற வாதம் வைக்கப்பட்டது.
பதவியில் உள்ள முதலமைச்சருக்கு மட்டுமே மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை என தி.மு.க தரப்பில் பதில் வாதம் வைக்கப்பட்டது
மெரினாவில் கலைஞருக்கு இடம் மறுக்கும் தமிழக அரசின் செயலுக்கு பல தரப்பிலும் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது. “இது அரசியல் பழி வாங்கும் செயல்” என தி.மு.க கூறியுள்ளது
கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்கத் தயார் என்று தமிழக அரசு அறிவித்தது.
1988-ம் ஆண்டே அண்ணா நினைவிடம் அருகே 500 மீட்டர் தூரம், சமாதி அமைக்கும் இடமாக அறிவிக்கப்பட்டது. அங்கு கட்டிடம் அமைக்கவே கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி வேண்டும் - தி.மு.க வாதம்
முன்னதாக மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு தடை கோரும் வழக்குகள் இருப்பதால், சட்ட சிக்கலை முன்வைத்து இடம் தர அரசு மறுத்தது. இன்று காலை ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த 5 வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது.
வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதால், அரசுக்கு இப்போது சட்டசிக்கல் எதுவும் இல்லை என்று நீதிபதி கருத்து.