This Article is From Aug 08, 2018

மெரினாவில் ஜெயலலிதாவின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட உள்ள கருணாநிதியின் உடல்

5 முறை தமிழக முதலமைச்சர் ஆக இருந்த கலைஞர் போன்ற ஒரு தலைவருக்கு உரிய மரியாதை அல்ல இது; என நீதிமன்றத்தில் வாதாடி மெரினாவில் இடத்தை பெற்றுள்ளது தி.மு.க

மெரினாவில் ஜெயலலிதாவின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட உள்ள கருணாநிதியின் உடல்
Chennai:

சென்னை: தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி செவ்வாய்க்கிழமை அன்று உயிர் நீத்த தி.மு.க தலைவர் கருணாநிதி அவர்களின் உடல், சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா உள்ளிட்ட மூன்று முன்னாள் முதலமைச்சர்களின் சமாதி அருகே புதைக்கப்பட உள்ளது.

நீதிமன்றத்தில் தி.மு.க அளித்துள்ள சமாதி வரைபடத்தின்படி, கலைஞரின் அரசியல் ஆசானான அண்ணாதுரை அவர்களின் சமாதிக்கும் அவரது அரசியல் எதிரியான ஜெயலலிதா அவர்களின் சமாதிக்கும் நடுவில் கலைஞர் அவர்களின் சமாதி எழுப்பப்படும் என தெரிகிறது. ஆர்.எஸ்.பாரதி (தி.மு.க) அவர்கள் அளித்துள்ள சமாதி வரைபடத்தின்படி, கலைஞர் அவர்களின் சமாதி எழுப்பப்பட உள்ளது.

jayalalithaa memorial

இன்று காலை தமிழக அரசு மற்றும் தி.மு.க.வினரிடையே நீதிமன்றத்தில் நடந்த காரசார விவாதங்களுக்கு பின்னர், கலைஞர் அவர்களின் உடலை மெரினா கடற்கரையில் புதைக்கக்கூடாது என்கிற தமிழக அரசின் முடிவை நிராகரித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

b9ctbnso

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருக்கும் மூத்த தலைவரான கருணாநிதி அவர்கள், செவ்வாய்கிழமை அன்று மருத்துவமனையில் உயிரிழந்தார். ‘கலைஞர்’ என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் கருணாநிதி அவர்களுக்கு மெரினா கடற்கரையில் சமாதி அமைக்க இடம் ஒதுக்கமுடியாது என மாநில அரசு சொன்னது, தமிழகத்தை தாண்டியும் பெரும் கண்டனத்துக்கு உள்ளானது. காந்தி மண்டபம் அருகே கலைஞர் அவர்களின் சமாதிக்கு தமிழக அரசு 2 ஏக்கர் நிலம் ஒதுக்கியதையடுத்து, “5 முறை தமிழக முதலமைச்சர் ஆக இருந்த கலைஞர் போன்ற ஒரு தலைவருக்கு உரிய மரியாதை அல்ல இது” என நீதிமன்றத்தில் வாதாடி மெரினாவில் கலைஞருக்கான இடத்தை பெற்றுள்ளது தி.மு.க.

.