தி.மு.க தலைவரும், 5 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த கலைஞர், உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி இன்று மாலை இயற்கை எய்தினார்.
தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து, அவரது மகனும், தி.மு.க செயல் தலைவருமான மு.க ஸ்டாலின் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தனது கைப்பட எழுதியுள்ள கடிதத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு தேசிய தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நாளை காலை சென்னை வர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இருந்து கருணாநிதியின் உடலானது கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. பின்னர், பொது மக்கள் பார்வைக்காக காலை 4 மணி முதல் ராஜாஜி அரங்கில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட உள்ளது என்று தி.மு.க சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது