This Article is From Aug 08, 2018

மெரினாவில் நல்லடக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்கின

தந்தைக்கு தனது இறுதி கடமையை நிறைவேற்றிய தருணத்தில் ஸ்டாலின் கண்ணீர் விட்டு உணர்ச்சி வசப்பட்டார்

மெரினாவில் நல்லடக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்கின

மெரினா கடற்கரையில், அண்ணா சமாதியின் அருகே கலைஞர் கருணாநிதியை நல் அடக்கம் செய்வதற்கான ஆயத்த பணிகள் தொடங்கின. பொதுப்பணித் துறையினருடன், தி.மு.கவின் முக்கியத் தலைவர்கள் உடன் இருந்து பணிகளை கண்காணித்து வருகின்றனர்.

முன்னதாக, கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் இட ஒதுக்க அரசுக்கு உத்தரவிட்டது உயர்நீதிமன்றம். இதை அடுத்து, தி.மு.க தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். தந்தைக்கு தனது இறுதி கடமையை நிறைவேற்றிய தருணத்தில் ஸ்டாலின் கண்ணீர் விட்டு உணர்ச்சி வசப்பட்டார்.

தி.மு.க தொண்டர்கள் அண்ணா நினைவிடத்தில் கூடத் தொடங்கி விட்டனர். அங்கு விரைவு அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தியதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார். இப்போது மெரினாவில் இடம் கிடைத்த தகவல் மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

.