Read in English
This Article is From Jul 30, 2019

துணை ராணுவத்தை குறிவைத்த ஜெய்ஷ் – இ - முகமது தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

தீவிரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கை என்று துணை ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா Edited by (with inputs from Agencies)

அனந்த்நாக் மாவட்டத்தில் என்கவுன்ட்டர் நடத்தப்பட்டுள்ளது.

Srinagar:

ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்த 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் ஒருவர் கடந்த ஜூன் 12-ம் தேதி 6 துணை ராணுவத்தினரை சுட்டுக் கொன்ற தீவிரவாதி ஆவார்.

இன்னொருவர் யார் என்கிற விவரம் வெளியிடப்படவில்லை. தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து துணை ராணுவத்தினர் அனந்த்நாக் மாவட்டத்தின் வாப்சன் கிராமத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சுடத் தொடங்கினர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.

Advertisement

இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவனது பெயர் பயாஸ் பன்சூ என்பதாகும்.

Advertisement