This Article is From Jul 01, 2019

ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சியை நீட்டிக்க மசோதா தாக்கல்!!

ஜம்மு காஷ்மீரில் பிடிபி கட்சிக்கு அளித்த வந்த ஆதரவை பாஜக விலக்கிக் கொண்டதை தொடர்ந்து கடந்த ஜூன் 2018 முதல் குடியரசு தலைவர் ஆட்சி இருந்து வருகிறது.

மாநிலங்களவையில் 2 மசோதாக்களை தாக்கல் செய்துள்ளார் அமித் ஷா.

New Delhi:

ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீக்க வழிசெய்யும் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதா மூலம் காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்தியின் பிடிபி கட்சியுடன், பாஜக கூட்டணி வைத்திருந்தது. இந்த நிலையில் கடந்த 2018 ஜூன் மாதம் பாஜக தனது ஆதரவை விலக்கிக் கொண்டது. இதையடுத்து அங்கு குடியரசு தலைவர் ஆட்சி நடைமுறையில் இருந்து வருகிறது. 

புல்வாமா தாக்குதல் நடைபெற்ற சில வாரங்களுக்கு பின்னர் மார்ச் மாதம் முக்கிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன்படி பாதுகாப்பு நிலைமையை கருத்தில்கொண்டு தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிக்கப்பட்டது. 

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள் ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகத்திற்கு எதிராக பாஜக செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினர். இந்த நிலையில் மேலும் 6 மாதத்திற்கு குடியரசு தலைவர் ஆட்சியை ஏற்படுத்த வழி செய்யும் மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்துள்ளார். 

ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா ஒன்றையும் அமித் ஷா தாக்கல் செய்துள்ளார். இது, காஷ்மீரில் சர்வதேச எல்லை அருகே வசிக்கும் மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும். 

.