This Article is From Sep 22, 2019

'காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக்கு நேருதான் காரணம்' - அமித் ஷா குற்றச்சாட்டு!!

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த மாதம் நீக்கி நடவடிக்கை எடுத்தது. அசம்பாவிதத்தை தவிர்ப்பதற்காக அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை காங்கிரஸ் அரசியலாக பார்ப்பதாக அமித் ஷா கூறியுள்ளார்.

Mumbai:

ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்ததற்கு நேருதான் காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். 

மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக மும்பையில் பிரசார கூட்டம் ஒன்றில் அமித் ஷா கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது-

காஷ்மீரில் சில இடங்களை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. இதற்கு நேருதான் காரணம். 1947-ல் அவர் நேரம் காலம் தெரியாமல் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தினார். இது பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு வழி செய்து விட்டது. 

காஷ்மீர் விவகாரத்தை இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய் படேல் கையாண்டிருக்க வேண்டும். ஏனென்றால், அதற்கு முன்பாக படேல் கையில் எடுத்த அனைத்து மாகாணங்களும் இந்தியாவுடன் இணைந்தன. 

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை காங்கிரஸ் அரசியலாக பார்க்கிறது. நாங்கள் அதை தேசிய பிரச்னையாக பார்க்கிறோம். 

சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை ராகுல் காந்தி அரசியல் விவகாரம் என்கிறார். அவர் இப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார். ஆனால் 3 தலைமுறைகளாக காஷ்மீருக்கு பாஜகவினர் காஷ்மீருக்காக உயிர்த்தியாகம் செய்துள்ளனர். 
இவ்வாறு அமித் ஷா பேசினார். 

.