This Article is From Sep 17, 2019

PoK : ''பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி'' - மத்திய அரசு திட்டவட்டம்!

ஒரே நாளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் இந்தியாவுடன் இணைந்திருப்பது உறுதி செய்யப்படும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.

New Delhi:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒரு பகுதி என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் இன்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பகுதிகள் இந்தியாவுக்கு சொந்தமானவை. ஒரே நாளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகள் இந்தியாவுடன் இணைந்திருப்பது உறுதி செய்யப்பட்டு விடும். இதுதொடர்பாக யாரும் வருத்தம் கொள்ளத் தேவையில்லை. 

தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக பாகிஸ்தான் சொல்கிறது. ஆனால் நடைமுறையில் அந்த நாடு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தீவிரவாதத்தை தூண்டி விடாத வரையில், நட்பு நாடாக மாறாத வரையில் இந்தியாவுக்கு அது ஒரு சவாலாகத்தான் இருக்கும். 

இவ்வாறு அவர் கூறினார். ஐ.நா. சபை கூட்டத்தின்போது பிரதமர் மோடியும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் சந்தித்துப் பேசுவார்களா என்று கேள்வி கேட்கப்பட்டபோது, 'இப்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள உறவு உங்களுக்கே தெரியும். அதிலே விடை இருக்கிறது' என்றார். 

முன்னதாக காஷ்மீர் விவகாரம் குறித்து நேற்று கருத்து தெரிவித்த  அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தான் பிரதமர் மோடியையும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானையும் சந்தித்து பேசவுள்ளதாக கூறியிருந்தார். 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருபகுதிதான் என்ற கருத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவும் தெரிவித்திருந்தனர். 

.