வீரர்கள் தியாகம் வீண்போகாது என்று அமித் ஷா கூறியுள்ளார்.
Lakhimpur: ஒரு தீவிரவாதியைக்கூட விட்டு விட மாட்டோம் என்று பாஜக தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். புல்வாமா தீவிரவாத தாக்குதல் குறித்து அசாம் மாநிலம் லகிம்பூரில் அவர் பேசியதாவது-
கோழைத்தனமான காரியத்தை பாகிஸ்தான் செய்துள்ளது. தீவிரவாதிகளை பின்னால் இருந்து தூண்டிவிட்டு இந்த காரியத்தை பாகிஸ்தான் செய்திருக்கிறது.
நம்முடைய வீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது. பாதுகாப்பு விஷயத்தில் மோடி அரசு சமரசம் செய்து கொள்ளாது. ஒரு தீவிரவாதியைக் கூட விடமாட்டோம்.
இவ்வாறு அவர் பேசினார். ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இருந்து பதிலடிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200 சதவீத வரி விதிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க : பாகிஸ்தான் சதி : ஈரானிலும் தாக்குதல் நடத்தி 27 கமாண்டோ வீரர்களை கொன்ற தீவிரவாதிகள்