हिंदी में पढ़ें Read in English
This Article is From Feb 16, 2019

80 மீட்டர் தூரத்தில் சிதறிக்கிடந்த வீரர்களின் உடல் – கொடூரத்தனத்தின் உச்சம்

ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் சுமார் 60 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
இந்தியா

Highlights

  • புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு
  • ஆர்.டி.எக்ஸ். குண்டுகள் 150 மீ. சுற்றளவுக்கு சேதம் ஏற்படுத்தும்
  • நீண்ட நாள் திட்டம் தீட்டி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
New Delhi/Srinagar:

ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 60 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடி பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்கொலைப்படை மூலம் சக்திமிக்க வெடிகுண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டதால் ரிசர்வ் படை வீரர்களின் உடல்கள் 80 மீட்டர் தூரத்திற்கு சிதறிப்போய்க் கிடந்தன.

முதல்கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ இ முகமது அமைப்பை சேர்ந்த அதில் அகமது தார் என தெரியவந்துள்ளது. அவர் ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து உள்பட மொத்தம் 350 கிலோ எடைகொண் வெடி குண்டுகளை ஸ்கார்ப்பியோ காரில் நிரப்பிக் கொண்டு, துணை ராணுவத்தினர் வந்த பேருந்து மீது மோத விட்டுள்ளான்.

இதில் பேருந்து பலத்த சத்தத்துடன் வெடித்ததில் அதில் இருந்த 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். முதலில் எந்தவகை வெடிகுண்டை பயன்படுத்தினார் என்பது தெரியவரவில்லை. தற்போது ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் படிக்க - “தமிழக வீரர்கள் 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 20 லட்சம்

Advertisement

இந்த வகை வெடிகுண்டு 150 மீட்டர் சுற்றளவுக்கு பயங்கர சேதத்தை ஏற்படுத்தும் சக்தி கொண்டது. இதனால்தான் வீரர்களின் உடல்கள் சுமார் 80 மீட்டர் தூரத்திற்கு சிதறிக்கிடந்துள்ளன.

தாக்குதலை நடத்தியிருப்பவர் படிப்பை பாதியில் விட்டவர். அவர் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில்தான் இருந்துள்ளார். அவருக்கு எப்படி இந்த வெடிகுண்டுகள் கிடைத்தன என்பது இன்னும் மர்மமாக உள்ளது.

Advertisement

இதேபோன்று தேசிய நெடுஞ்சாலையில் தீவிரவாதி காருடன் செல்வதற்கு அனுமதித்தது யார் என்பதை விசாரித்து வருகின்றனர். நீண்ட காலமாக திட்டம் தீட்டப்பட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக இன்னும் அடுத்தடுத்து புதிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Advertisement

மேலும் படிக்க - “காஷ்மீர் தாக்குலுக்காக விளையாட்டு விருது நிகழ்ச்சி ஒத்திவைப்பு

Advertisement