Read in English
This Article is From Feb 15, 2019

தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு

புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ரிசர்வ் போலீசார் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement
இந்தியா (with inputs from PTI)
Jammu:

ஜம்மு காஷ்மீரில் ரிசர்வ் போலீசார் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து புல்வாமா மாவட்டத்தில் இன்று ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக் கிழமை என்பதால் ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழல் காணப்படுகிறது. தீவிரவாத தாக்குதல்களை கண்டித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் விதமாக கொடி அணிவகுப்பு நடத்தும்படி ராணுவம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே வகுப்புவாத வன்முறைகளை ஏற்படாதபடி தடுக்கும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. 

ஜம்முவின் ஓல்டு சிட்டி பகுதியில் போராட்டங்கள் நடந்தன. கலைந்து செல்ல மறுத்த போராட்டக்காரர்கள் தடியடி நடத்தி கலைக்கப்பட்டனர். 

Advertisement

 

மேலும் படிக்க : புல்வாமா தாக்குதல்: சம்பவ இடத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் வாழ்ந்த தீவிரவாதி!

Advertisement
Advertisement