This Article is From Dec 31, 2018

மைனஸ் 16 டிகிரி குளிரில் கார்கில் - காஷ்மீரிலும் வெப்பநிலை கடுமையாக குறைந்தது

ஸ்ரீநகர், காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் உள்ளிட்ட பகுதியில் வெப்பநிலை குறைந்துள்ளது. டால் எரியில் உறைபனி காணப்படுகிறது.

மைனஸ் 16 டிகிரி குளிரில் கார்கில் - காஷ்மீரிலும் வெப்பநிலை கடுமையாக குறைந்தது

ஜம்மு காஷ்மீரின் மிகவும் குளிர்ந்த பகுதியாக கார்கில் மாறி வருகிறது.

Srinagar:

ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் கடும் குளிர் காணப்படுகிறது. அங்குள்ள கார்கிலில் வெப்பநிலை மைனஸ் 16.2 டிகிரி செல்சியசுக்கு சென்றிருக்கிறது. மாநிலத்திலேயே மிகவும் குளிர்ந்த பகுதியாக கார்கில் மாறிவிட்டது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 


இதேபோன்று ஸ்ரீநகர், காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் உள்ளிட்ட பகுதிகளிலும் வெப்பநிலை குறையத் தொடங்கியுள்ளது. டால் ஏரியின் பல பகுதியில் தண்ணீர் உறைந்து காணப்படுகிறது. 


கோடை காலத்தில் ஜம்மு காஷ்மீரின் தலைநகராக ஸ்ரீநகர் செயல்படும்.  இங்கு மைனஸ் 7.6 டிகிரி செல்சியஸ் வரைக்கும் வெப்பநிலை சென்றிருக்கிறது. 


நீண்ட நாட்களாக பனிகொட்டி வருவதால் மக்களுக்கு இருமள், சளி, மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக குழந்தைகளும், முதியவர்களும் பாதிப்படைந்துள்ளனர்.


இன்னும் சில  வாரங்களுக்கு பனிப்பொழிவு நீடிக்கும் என வானிலை ஆய்வுமையம் தகவல்  தெரிவித்துள்ளது. 

.