This Article is From Oct 03, 2019

J&K - 50 நாட்களுக்கு மேல் வீட்டுச்சிறை; Kashmir-ல் தொடரும் பதற்றம் - அரசின் அடுத்த மூவ்!

Kashmir-ல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது குறித்து ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா உள்ளிட்டவை கவலை தெரிவித்தன

J&K - 50 நாட்களுக்கு மேல் வீட்டுச்சிறை; Kashmir-ல் தொடரும் பதற்றம் - அரசின் அடுத்த மூவ்!

Jammu and Kashmir கட்டுப்பாடுகளை தளர்த்துவது என்பது முழுக்க முழுக்க உள்ளூர் அரசமைப்புகளின் சிபாரிசைப் பொறுத்தது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது இந்திய அரசு. 

Srinagar:

ஜம்மூ காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவான 370 ரத்து செய்யப்பட்டதில் இருந்து, அங்கிருக்கும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் ஒருவர் பின் ஒருவராக விடுவிக்கப்படுவார்கள் என்று ஜம்மூ காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகரான ஃபரூக் கான் தகவல் தெரிவித்துள்ளார். ஜம்மூவைச் சேர்ந்த பல தலைவர்கள் வீட்டுச் சிறையில் இருந்த நிலையில், அவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டார்கள். 

முன்னாள் முதல்வர்களான ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்டி உள்ளிட்ட 400 அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி, அதிரடி நடவடிக்கையாக, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து உத்தரவிட்டது. 

காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது குறித்து ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா உள்ளிட்டவை கவலை தெரிவித்தன. அதே நேரத்தில், ஜம்மூ காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது என்பது முழுக்க முழுக்க உள்ளூர் அரசமைப்புகளின் சிபாரிசைப் பொறுத்தது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது இந்திய அரசு. 

அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. பல இடங்களில் இன்னும் கட்டுப்பாடுகள் நிலவி வரும் நிலையில், ஸ்ரீநகரில் கடுமையான வாகன நெரிசல் இருந்து வருகிறது. பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகையும் இன்னும் முழு வீச்சில் இல்லை என்று சொல்லப்படுகிறது. 


 

.