பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான கேட் மிடில்டனின் ஆடைகள் இளவரசி டயானாவை ஒத்திருந்தது.
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் அவரது மணைவியான இளவரசி கேட் மிடில்டனும் 5 நாள் சுற்றுப்பயணமாக பாகிஸ்தானுக்குச் சென்றனர். அப்போது கேட் மிடில்டனின் உடை பலரின் கவனத்தையும் ஈர்த்தது. ஏனென்றால், 1996-ஆம் ஆண்டு இளவரசி டயானா பாகிஸ்தானுக்குச் செல்லும்போது அணிந்திருந்த ஆடையைப் போலவே, இளவரசி கேட் மிடில்டனும் அணிந்து சென்றுள்ளார். 37 வயதான அவர், வெளிர் நீல நிரத்தில், அதற்கு இணையான பேன்ட் உடன் பாரம்பரிய சுடிதார் கமீஸின் நவீன உடை போல அனிந்திருந்தார்.
அவர் தேர்வு செய்திருந்த அந்த வெளின் நீல நிர ஆடையானது, இளவரசர் வில்லியம்ஸின் தாயான, மறைந்த இளவரசி டயானா 1996-ல் இதேபோல் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தபோது அணிந்திருந்த ஆடையை ஒத்திருந்தது.
People வெளியிட்ட செய்தியின் படி, கேட் மிடில்டனின் இந்த உடையை, இளவரசி டயானாவுக்கு பிடித்த கேத்தரின் வாக்கர் எனும் ஆடை அலங்கார நிபுனர் தான் வடிவமைத்துள்ளார். இதனை டுவிட்டர் பக்கங்கள் உடனடியாக கண்டறிந்துள்ளது.
இருவருக்குமான ஒப்பீடு செவ்வாய்க் கிழமையும் நீடித்தது. வில்லியம்ஸ்-கேட் தம்பதியினர் இஸ்லாமாபாத்தில் உள்ள பள்ளிக்குச் சென்றிருந்தனர். அப்போது, மஹீன் கான் வடிவமைப்பில் பெரிவிங்கிள் நீல நிறத்தில், முழுவதுமாக கைகளால் எம்பிராய்டு செய்யப்பட்ட உடையில் சென்றிருந்தார்.
பாகிஸ்தானின் பாரம்பைரிய உடையான சல்வார் கமீஸ்-துப்பட்டாவான இந்த உடையும், டயானா அந்நாட்டுக்கு சென்றபோது அணிந்திருந்ததைப் போலவே இருந்தது. மேலும், கேட் அணிந்திருந்த சபையர் மற்றும் வைர மோதிரம், டயானாவின் நிச்சயதார்த்த மோதிரமாகும். இணையவாசிகள் இவை அனைத்தையும் வெகு சீக்கிரத்தில் கண்டறிந்து வைரலாக்கிவிட்டனர். கேட் மிடில்டனின் இந்த இரண்டு உடைகளும் இளவரசி டயானாவை அனைவருக்கும் நினைவூட்டின.
கென்சிங்டன் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், "தளவாட மற்றும் பாதுகாப்பின் அடிப்படையில், இது தி டியூக் மற்றும் டச்சஸ் ஆகியோரால் இன்றுவரை மேற்கொள்ளப்பட்ட மிகவும் சிக்கலான சுற்றுப்பயணமாகும்" என அறிவித்துள்ளது. மேலும், இந்த அரச சுற்றுப்பயணம் வரும் வெள்ளிக்கிழமையோடு முடிவடைகிறது.
Click for more
trending news