This Article is From Jun 10, 2019

கதுவா வழக்கு: 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

குற்றம் சாட்டப்பட்ட 7 பேரில் 6 பேர் குற்றவாளி எனத் தீர்ப்பு.

கதுவா வழக்கு: 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
New Delhi:

கதுவா வழக்கு: ஜம்மு & காஷ்மீரில் 8 வயது நாடோடி இன முஸ்லீம் சிறுமியை கோயிலுக்குள் வைத்து பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. அதில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரில் 6 பேர் குற்றவாளி எனத் தீர்ப்பு. 

காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று பாந்தன்கோட் சிறப்பு நீது மன்றத்தில் வழங்கப்படவுள்ளது. இந்த கொடூரமான கொலை நாடு முழுவதும் கடும் போராட்டத்தை தூண்டியது. இந்த வழக்கில் 8 பேர் வழக்கில் சிக்கியுள்ளனர். குற்றவாளிகளுக்கு குறைந்த பட்சம் ஆயுள் தண்டனை அல்லது அதிகமாக தூக்குத் தண்டனை கிடைக்கலாம் எனத் தெரிகிறது.  

ஜூன் 3ம் தேதி வழக்கு விசாரணை முடிவடைந்து விட்டது. 

 குற்றப்பத்திரிகையில், முஸ்லீம் நாடோடி இன சிறுமி கடந்த ஆண்டு ஜனவரி 10 ம் தேதி கதுவா மாவட்டத்தில் கடத்தப்பட்டு கோயிலுக்குள் 4 நாட்கள் வைத்து வன்புணர்வு செய்யப்பட்டு  கொல்லப்பட்டார். கொலை செய்தது 18 வயது நிரம்பாத சிறுவன் என்பது தெரிய வந்தது. 

 முக்கிய குற்றவாளி ஓய்வு பெற்ற வருவாய் துறை அதிகாரி சஞ்சி ராம்  கடந்த ஆண்டு மார்ச் 20 அன்று சரணடைந்தார். 

சஞ்சி ராம், அவரது மகன் விஷால் மற்றும் அவரது நண்பர் ஆனந்த் தத்தா சிறப்பு காவல்துறை அதிகாரிகளான தீபக் கஜூரியா மற்றும் சுரேந்தர் வர்மா  ஆதாரங்களை அழிக்க முற்பட்ட துணை ஆய்வாளர் ஆனந்த் தத்தா மற்றும் தலைமை கான்ஸ்டபிள் திலக் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கதுவா நீதிமன்றத்தில் ஏப்ரல் 9 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வந்தபோது நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் அதை தடுக்க முற்பட்டனர். இதனால்  உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ஜம்மூ காஷ்மீரில் இருந்து மாற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. 

.