This Article is From Aug 21, 2018

கத்துவா பலாத்காரத்தின் சாட்சி துன்புறுத்தல் - விளக்கம் கேட்டு நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் பதில் தாக்கல் செய்ய கெடு விதித்துள்ளது நீதிமன்றம்

கத்துவா பலாத்காரத்தின் சாட்சி துன்புறுத்தல் - விளக்கம் கேட்டு  நீதிமன்றம் உத்தரவு
New Delhi:

கத்துவா பாலியல் பலாத்கார சம்பவத்தின் சாட்சிய துன்புறுத்தியதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்குமாறு ஜம்மு காஷ்மீர் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் பதில் தாக்கல் செய்ய கெடு விதித்துள்ளது நீதிமன்றம்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி கன்வில்கர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. கத்துவா கூட்டு பாலியல் பலாத்காரம் சம்பவத்தின், முக்கிய சாட்சியான தாலிப் ஹுசேன், தான் காவல் துறையினரால் துன்புறுத்தப்பட்டதாக மனு தாக்கல் செய்துள்ளார். மற்றொரு பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் இருந்த போது, துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தாலிப் ஹுசேனின் உயிருக்கு சிறையில் பாதுகாப்பு வேண்டும் என்றும், அவர் துன்புறுத்தப்படுவதாகவும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 8 வயது சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் 7 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தாலிப் ஹுசேன் தான் முக்கிய சாட்சி. மேலும், ஒரு சிறுவன் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவல் துறை அறிக்கையில், அந்த சிறுமி எப்படி கடத்தப்பட்டார், எப்படி போதை மருந்து வழங்கப்பட்டது, எப்படி கோயிலுக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார், என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

.