This Article is From May 28, 2018

காஷ்மீர் சிறுமி பாலியல் பலாத்காரம்

சிறுமியின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் தங்களுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று புதிய மனுவை தாக்கல் செய்தார்

கத்துவா வழக்கு: சம்பந்தப்பட்ட குழந்தை கொல்லப்படுவதற்கு முன் கடத்தப்பட்டு, மயக்க மருந்து செலுத்தி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது

ஹைலைட்ஸ்

  • நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தால் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தது
  • நீதிபதிகள் வழக்கை பதான்கோட் கோர்டுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
  • தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என சிறுமியின் தந்தை மனு தாக்கல் செய்தார்
New Delhi: கதுவா: காஷ்மீர் மாநிலத்தில் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட 8 வயது சிறுமியின் குடும்பத்துக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க காஷ்மீர் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 
kathua gang rape protest

காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி ஆஷிபா 8 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டு கோயிலுக்குள் மறைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தால் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். குற்றவாளிகள் பங்கேற்ற பேரணியில் கலந்துகொண்ட 2 பாஜக அமைச்சர்கள் பதவி விலகினர். இந்நிலையில் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோரட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் சிபிஐ விசாரணை கோரிக்கையை நிராகரித்து வழக்கை பதான்கோட் கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

 
kathua gang rape and murder narendra modi

விசாரணை நடந்து வரும் நிலையில், சிறுமியின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் தங்களுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று புதிய மனுவை தாக்கல் செய்தார். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் சிறுமியின் குடும்பத்துக்கு தகுந்த பாதுகாப்பை வழங்க ஜம்மு காஷ்மீர் அரசுக்கு உத்தரவிட்டது.

.