ஹைலைட்ஸ்
- தன் முதல் விளம்பர படம் குறித்து மனம் திறந்தார் கத்ரினா.
- தென்னிந்திய பிரபலமான நடிகர் விஜய்யுடன் நடித்திருந்தார்.
- சல்மான் கானுடன் தற்போது இவர் ஒரு படம் நடித்து வருகிறார்.
New Delhi: கத்ரினா கைஃப் மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்த பிறகு விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தென்னிந்திய பிரபலமான நடிகர் விஜயுடன் தன் முதல் விளம்பர படத்தில் நடித்திருந்தார். அனைட்டா ஷ்ரூஃப் அடாஜனியாவுடன் நடந்த "Feet up with the Stars" என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் கத்ரினா கைஃப். அப்போது தன் முதல் விளம்பர படம் ஊட்டியில் எடுக்கப்பட்டது என்றும் அதன் அனுபவம் பற்றியும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “நான் தரையில் அமர்ந்திருந்தேன். ஊட்டி குளிரில் தான் ஷூட்டிங் எடுக்கப்பட்டது. தரையில் அமர்ந்திவாறே கையில் ஃபோன் வைத்திருந்தேன். அப்போது என் முன் ஷூ அணிந்து யாரோ நின்றது போல் தோன்றியது. நான் யாரென்று பார்க்கவோ தெரிந்து கொள்ளவோ விரும்பவில்லை.
சில நிமிடங்கள் கழிந்தும் அந்த கால்கள் என் முன்னே இருந்தது. பின் நிமிர்ந்து பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது. தென்னிந்தியாவில் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர் விஜய் என்று தெரிய வந்தது. என்னிடம் மிகவும் கணிவாக பேசினார். மேலும் எனக்கு “குட் பை” சொல்வதற்காகதான் இவ்வளவு நேரம் காத்திருந்தேன் என்று சொல்லி விடைப்பெற்றார்.
பிரபல பாலிவுட் நடிகையான கத்ரினா கைஃப், தன் 18 வயதிலேயே நடிகர் விஜய்யுடன் கோகோ கோலா விளம்பரத்தில் நடித்திருந்தார். அதனை கத்ரினாவின் ரசிகர்கள் பல வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட விளம்பர படத்தை யூட்யூப்பில் இருந்து எடுத்து வைத்திருந்தனர். இதுபோல மேலும் சில நிகழ்ச்சிகள் குறித்தும் பேசினார். அத்துடன் தீபிகா படுகோனை வைத்து ஒரு ப்ரொமோஷனல் பாடல் எடுக்கப்போவதாகவும் கூறினார்.
மேலும் சல்மான் கானுடன் தான் நடிக்கும் “பாரத்” படம் ஜூன் 5 ஆம் தேதி வெளிவரயிருக்கிறது என்று தெரிவித்தார்.