Read in English বাংলায় পড়ুন
This Article is From Oct 19, 2018

‘பெருமையாக உணர்கிறேன்!’- சபரிமலை கோயிலுக்கு அருகில் தடுக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர்

நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு, இந்த இரண்டு பெண்கள் தான் முதன்முறையாக கோயிலுக்குள் செல்ல உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது

Advertisement
தெற்கு
Sabarimala, Kerala:

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 2 பெண்கள், 300 போலீஸ் பாதுகாப்புடன் இன்று நுழைய இருந்தனர். அவர்கள் கோயிலுக்கு மிக அருகில் சென்ற போது, போராட்டக்காரர்கள் பெரும் அளவு கூடி, எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரண்டு பெண்களும் சபரிமலையிலிருந்து கீழே இறங்க அறிவுறுத்தப்பட்டனர்.

அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு, இந்த இரண்டு பெண்கள் தான் முதன்முறையாக கோயிலுக்குள் செல்ல உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. கோயிலின் நடை திறந்து 3 நாட்கள் கடந்துள்ள நிலையில், பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று போராட்டக்காரர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

2 பெண்களில் ஒருவர் ஐதரபாத்தில் இருக்கும் மோஜோ டிவி-யைச் சேர்ந்த பத்திரிகையாளர் கவிதா ஜக்கல். போராட்டக்காரர்களிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள, முழு உடல் கவசத்துடன் கவிதா ஏறியுள்ளார். கோயிலுக்கு இன்னும் 500 மீட்டரே இருந்த நிலையில், போராட்டக்ககாரர்கள் பெருமளவு கூடி, கவிதாவை மேற்கொண்டு செல்லாதபடி செய்தனர். இதனால், அவர் வேறு வழியின்றி சபரிமலையிலிருந்து கீழே இறங்கி வந்தார்.

Advertisement

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கவிதா, ‘அனைத்து வித எதிர்ப்புகளையும் மீறி, சபரிமலை கோயிலுக்கு அருகில் சென்றது குறித்து பெருமையாக உணர்கிறேன்' என்று தெரிவித்தார்.

கவிதாவின் பயணத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆதரவு தெரிவித்திருந்தார். மேலும், அவர் கவிதாவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் நேற்று உறுதியளித்திருந்தார்.

Advertisement
Advertisement