This Article is From Dec 19, 2019

மாணவர்கள் அரசியலிருந்து விலகி இருக்க வேண்டும்: மத்திய கல்வி அமைச்சர் வேண்டுகோள்

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் சட்டத்தை எதிர்த்து போராட முற்பட்டபோது பல்கலைக்கழக வாயில்கள் பூட்டப்பட்டன. பல்கலைக்கழக நிர்வாகம் ஜனவரி 5 வரை பல்கலைக்கழகம் மூடப்படுவதாக அறிவித்துள்ளது. மோதலினால் 60 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

மாணவர்கள் அரசியலிருந்து விலகி இருக்க வேண்டும்: மத்திய கல்வி அமைச்சர் வேண்டுகோள்

Citizenship Act Protests: ஜாமியா மில்லியா பல்கலைக்கழக போராட்டம் நாடெங்கும் பரவியது

Dehradun:

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கல்வி நிறுவனங்கள் அரசியலிருந்து விலகி நிற்கமாறும், அரசியல் கட்சிகள் கல்வி நிலையங்களை விட்டு விலகி நிற்கவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். நரேந்திர மோடியின் அரசு மாணவர்களுக்கே முன்னுரிமை கொடுப்பதாக வலியுறுத்தியுள்ளார். 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தொடர்வதையொட்டி இக்கருத்தினை தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் உத்திர பிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு எதிரான காவல்துறையின் ஒடுக்குமுறை காரணமாக அவரின் கருத்துகள் வெளிவந்துள்ளன. 

ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக மாணவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே நடந்த மோதலில் நான்கு பொது பேருந்துகள் மற்றும் இரண்டு காவல்துறை  வாகனங்கள் எரிந்தன. இதில் மாணவர்கள், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உட்பட கிட்டத்தட்ட 60 பேர் காயமடைந்தனர்.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் சட்டத்தை எதிர்த்து போராட முற்பட்டபோது பல்கலைக்கழக வாயில்கள் பூட்டப்பட்டன. பல்கலைக்கழக நிர்வாகம் ஜனவரி 5 வரை பல்கலைக்கழகம் மூடப்படுவதாக அறிவித்துள்ளது. மோதலினால் 60 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். 

“அரசியல் கட்சிகளே உங்கள் அரசியலிருந்து கல்வி நிறுவனங்களை விலக்கி வையுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று ரமேஷ் போக்ரியால் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார் 

தேசத்தின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும்போது எந்தவொரு நாட்டிற்கும் கல்வி நிறுவனங்கள் முக்கியம் என்றும் மாணவர்களை சொத்துக்கள் என்றும் கூறினார். “மாணவர்களே நரேந்திர மோடி அரசின் முன்னுரிமை பெற்றவர்கள். மோடி மாணவர்களின் நலனுக்காக இரவும் பகலும் உழைத்து வருகிறது” என்றும் தெரிவித்தார். 

இந்திய நாட்டிலும் அயல் நாட்டிலும் மாணவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையை எதிர்த்து பலரும் போராடி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியும் அமைதி, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை பேணுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் எந்தவிதமான வதந்திகள் மற்றும் பொய்களிலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொண்டார். 

.