சந்திரபாபு நாயுடுவை, கெஜ்ரிவால் வரவேற்கும் காட்சி
New Delhi: அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது தொடங்கியுள்ளன. அந்த வகையில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு (Chandrababu Naidu) டெல்லியில் இன்று சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவராக இருந்தவரும், லோக்நந்த்ரிக் ஜனதா தள தலைவருமான சரத் யாதவ் உடன் இருந்தார்.
டெல்லியில் உள்ள ஆந்திர பிரதேச பவனில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற்றது. இதுகுறித்து கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில், “ சந்திரபாபு நாயுடு (Chandrababu Naidu) உடனான சந்திப்பு இனிமையாக இருந்தது. சரத் யாதவும் இந்த சந்திப்பின்போது இருந்தார். தேசிய விவகாரங்கள் குறித்து பேசினோம். நாட்டுக்கே அச்சுறுத்தலாக மத்திய பாஜக அரசு உள்ளது. நாட்டையும், அரசியல் அமைப்பையும் பாதுகாக்க மக்கள் ஒன்றுபட வேண்டும்” என்று கூறியுள்ளார்.