This Article is From Aug 20, 2020

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 103 வயது முதியவர் குணமடைந்தார்!

முதியவரின் மனைவி மற்றும் மகன் ஆகியோரும் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 103 வயது முதியவர் குணமடைந்தார்!

கடந்த ஜூலை 28 ஆம் தேதி, காய்ச்சல் மற்றும் உடல் வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Thiruvananthapuram:

கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 103 வயது முதியவர், நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளார். 

அலுவாவைச் சேர்ந்த அந்த நபர், எர்ணாகுளத்தில் உள்ள காலாமாசேரி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். நோய்த் தொற்று ஏற்பட்ட 20 நாட்களில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பும்போது, மருத்துவ ஊழியர்கள் மலர் கொத்துக் கொடுத்து உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். 

கடந்த ஜூலை 28 ஆம் தேதி, காய்ச்சல் மற்றும் உடல் வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவரின் வயதை கணக்கில் கொண்டு, சிறப்பு மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வந்தது. 

முதியவரின் மனைவி மற்றும் மகன் ஆகியோரும் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களும் நோய் பாதிப்பிலிருந்து மீண்டு டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 

இந்த சம்பவம் பற்றி கேரளாவின் சுகாதார அமைச்சர் கேகே சைலஜா, “நாங்கள் மிகவும் வயதான நோயாளிகளுக்கு மருத்துவம் செய்து குணமடைய வைக்கிறோம் என்பது எங்களுக்கு மிகப் பெரும் பெருமை” என்று பூரிக்கிறார். 

இதற்கு முன்னர் கொள்ளம் பகுதியில் உள்ள பாரிப்பள்ளி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்ட 105 வயது மூதாட்டி, நோய்த் தொற்றிலிருந்து மீண்டது குறிப்பிடத்தக்கது. 

.