This Article is From Jul 25, 2018

பெற்றோர்களால் வீட்டில் அடைக்கப்பட்டிருந்த 3 கேரளச் சிறுவர்கள் மீட்பு

மூன்று சிறுவர்களும் (வயது 6, 9, 12) எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் முகம்மது சஃபிருல்லாஹ் உத்தரவின் பேரில் சிறுவர் நல ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்

பெற்றோர்களால் வீட்டில் அடைக்கப்பட்டிருந்த 3 கேரளச் சிறுவர்கள் மீட்பு
Thiruvananthapuram:

திருவனந்தபுரம்: வீட்டில் பெற்றோர்களால் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் மூன்று சிறுவர்களையும் மாநில சிறுவர் பாதுகாப்பு அமைப்பினர் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.

பள்ளிக்கு அனுப்பப்படாமல், சிறுவர்கள் சிறைவைக்கப்பட்டிருப்பதாக அவ்வீட்டின் அருகே வசிப்பவர்கள் புகார் கொடுத்திருந்தனர். சிறுவர்களின் தந்தை அப்துல் இலத்தீப் (50) உள்ளூர் செய்தியாளர்களிடம் கூறுகையில் “எனக்கு இந்தியச் சட்டங்களில் நம்பிக்கை இல்லை. நான் அரேபிய நாடுகளில் பின்பற்றப்படும் கல்விமுறையைப் பின்பற்றி எனது குழந்தைகளுக்கு கற்பித்து வருகிறேன்” என்றார். மேலும் தனது வீடு புனிதமானது என்றும் அதன் புனிதத்தன்மையைக் கெடுக்கக்கூடாது எனவும் கூறிய அவர் யாரையும் உள்ளே அனுமதிக்க வில்லை.

மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் அவர்கள் சிறுவர் நல ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஆனால் சிறுவர்கள் மூவரும் தன் தந்தைக்குக்கு ஆதரவாகவே பேசினர். தங்களுக்குப் பள்ளிக்குச் செல்வதில் விருப்பமில்லை என்றும் வீட்டில் வைத்து தனது தந்தை அளிக்கும் கல்வியே போதுமானது என்றும் கூறினர்.

அக்கம்பக்கத்தினருக்கு இக்குடும்பத்தைப் பற்றி எதுவும் தெரியவில்லை. குறிப்பாக அம்மூன்று சிறுவர்களையும் பெரும்பாலும் பார்த்ததில்லை என்று கூறப்படுகிறது. இரண்டாம் தளத்தின் உள்ளே மிக மர்மமான முறையில் இவர்கள் வாழ்ந்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

.